கசந்து போனதா 11 வருட திருமண வாழ்க்கை.. பிரிவிலும் கூட இப்படி ஒரு ஒற்றுமையா..? நொந்துபோன ரசிகர்கள்..

By Mahalakshmi on மே 14, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக வளம் வரும் ஜிவி பிரகாஷிம், பாடகி சைந்தவியும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் தாங்கள் பிரிந்து செல்வதாக அறிவித்திருக்கிறார்கள். இது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜி.வி பிரகாஷ் வெயில் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார்.

   

இவர் அந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறப்பான திறமையை காண்பித்திருந்தார். அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்திருக்கின்றார். குறுகிய காலத்திலேயே முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வளர்ந்து விட்டார். பாடல்கள் மட்டும் இல்லாமல் பாடகராகவும் ஜி வி பிரகாஷ் பல பாடல்களை பாடியிருக்கிறார்.

   

 

ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களை கூறலாம். இதைத்தொடர்ந்து ஜி வி பிரகாஷ் நடிகராகவும் அறிமுகமானார். பல திரைப்படங்களில் நடித்திருந்த போதிலும் நடிகராக இவரால் இன்னும் ஜொலிக்க முடியவில்லை. டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, சர்வம் தாளமயம், சிகப்பு மஞ்சள் பச்சை உள்ளிட திரைப்படங்கள் இவருக்கு சுமாரான வெற்றியை பெற்றுக் கொடுத்தது,

கடைசியாக வெளியான கள்வன் மற்றும் டியர் உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இவர் பிரபல பாடகியான சாய்ந்தவியை பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்தார். 2013ஆம் ஆண்டு இருவரும் பெற்றோர் சம்பவத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு ஆன்வி என்கின்ற மகள் இருக்கிறார். சைந்தவி பின்னணி பாடகியாக தற்போது வரை சினிமாவில் அசதி வருகிறார்.

ஜிவி பிரகாஷ் இசையில் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். தமிழ் சினிமாவில் ஃபேவரிட் ஜோடி என்று வலம் வந்து இவர்கள் தற்போது தங்களுடைய சமூகவலைதள பக்கத்தில் நாங்கள் இருவரும் பிரிந்து போவதாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். இது பலருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென தனது பிரிவு அறிவித்ததன் காரணம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Cineulagam (@cineulagamweb)