அந்த மனசு இருக்கே..! தான் படித்த பள்ளிக்கு பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை அள்ளிக் கொடுத்த அப்புக்குட்டி.. குவியும் பாராட்டு..!

By Mahalakshmi on மே 14, 2024

Spread the love

நகைச்சுவை நடிகரான அப்பு குட்டி தான் படித்த பள்ளிக்கு 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வாங்கி கொடுத்து உதவி செய்திருக்கின்றார். இது தொடர்பான தகவல் தற்போது வைரலாகி வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் நாதன் கிணறு கின்ற கிராமத்தை சேர்ந்தவர் நடிகர் அப்புகுட்டி. இவருடைய இயற்பெயர் சிவபாலன்.

 

   

   

சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்று ஆசையுடன் சென்னைக்கு வந்த இவர் ஆரம்பத்தில் ஹோட்டலில் சப்ளையராக வேலை செய்து வந்தார். அப்போது ஹோட்டலுக்கு வரும் சினிமா பிரபலங்களிடம் வாய்ப்பு கேட்டு படிப்படியாக சினிமாவிற்குள் நுழைந்த இவர் தமிழில் சொல்ல மறந்த கதை என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

 

பின்னர் கில்லி, மாயாவி, அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார். இருப்பினும் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த திரைப்படம் என்றால் வெண்ணிலா கபடி குழு தான். இந்த திரைப்படத்தை சுசீந்திரன் இயக்கியிருந்தார். இப்படம் அப்பு குட்டிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அவரின் நடிப்பு திறமையை பார்த்த சுசீந்திரன் அவரை வைத்து அழகர்சாமியின் குதிரை என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். காமெடி வேடங்களில் நடித்து வந்து இவருக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தில் தனது அசாத்திய நடிப்பை காட்டி சிறந்த நடிகன் என்பதையும் நிரூபித்து இருந்தார் . அதைத்தொடர்ந்து நடிகர் அஜித்துடன் சேர்ந்து வீரம், வேதாளம் உள்ளிட படங்களில் நடித்திருந்தார்.

கடைசியாக சிம்புவின் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்பொழுது சமீபத்தில் வெளியாகி ரசிகர்களையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் தனது சொந்த ஊரான நாதன் கிணற்றில் இருக்கும் முத்துராமன் கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தார் அப்புக்குட்டி. அங்கு தான் படித்த பள்ளிக்கு அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதை அறிந்த அவர் ஊர் மக்களுடன் சேர்ந்து பள்ளிக்கு தேவையான மேஜை, கம்ப்யூட்டர், டிவி உள்ளிட்ட 11 லட்சம் மதிப்பிலான பொருட்களை சீராக கொடுத்திருக்கின்றார். இந்த செயலை பார்த்த பலரும் இவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.