நீங்காத இடம் பிடித்தவர் தான் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம். தமிழ் திரை இசையில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் இவர் பாடல்களை பாடியுள்ளார். பாடகராக மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும் இவர் இசையமைத்துள்ளார். தமிழ் திரை உலகில் பன்முகத்திறமை கொண்ட கலைஞராக வலம் வந்தவர். இவருடைய குரல் என்பது மூன்று தலைமுறையின் குரல். அதனால்தான் இவர் 40 ஆண்டுகளுக்கு மேலாக அவர் மறையும் வரை பாடிக் கொண்டே இருந்தார். தமிழ் திரை இசை ரசிகர்களால் பாடும் நிலா பாலு என்ற அன்புடன் அழைக்கப்பட்ட பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.
இவருடைய மறைவு ஒட்டுமொத்த ரசிகர்களையும் மீளா துயரத்தில் ஆழ்த்தியது. அவர் இந்த மண்ணுலகை விட்டு பிரிந்தாலும் மக்களின் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். இந்த நிலையில் எஸ்பிபி- க்கு எம்ஜிஆர் செய்த உதவி பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆந்திராவை சேர்ந்த எஸ்பிபி-க்கு இன்ஜினியர் ஆவது தான் ஆசை. பாடுவதை ஒரு பொழுதுபோக்காக தான் அவர் வைத்திருந்தார். சில தெலுங்கு படங்களில் பாடிவிட்டு 1969 ஆம் ஆண்டு தான் தமிழுக்கு வந்தார். முதலில் எம்.எஸ்.வி இடம் வாய்ப்பு கேட்டபோது அவர் உன் தமிழ் உச்சரிப்பு சரியில்லை நன்றாக தமிழ் கற்றுக் கொண்டு வா என்று கூறி அனுப்பி விட்டார்.
பிறகு தமிழை நன்றாக கற்றுக்கொண்டு எம்எஸ்வி-யிடம் மீண்டும் சென்றபோது அவருக்கு தமிழில் முதலில் கிடைத்த வாய்ப்பு எம்ஜிஆரின் அடிமை பெண் படத்தில் வரும் ஆயிரம் நிலவே வா பாடல் தான். இந்தப் பாடல் பதிவின்போது எஸ்பிபிக்கு திடீரென உடல்நிலை சரி இல்லாமல் போய்விட்டது. அதனால் பாடகரை மாற்றி விடலாம் என்று எம் எஸ் வி கூறிய போது எம்ஜிஆர், என் படத்தில் முதல் பாடலை பாடுவதாக அந்தப் பையன் பலரிடம் கூறியிருப்பான். அவனுக்கு நாம் ஏமாற்றத்தை தர வேண்டாம். உடல்நிலை சரியான பிறகு அவன் வந்து பாடட்டும் என்று எம்ஜிஆர் கூறியுள்ளார். அப்போது எம்ஜிஆர் சொன்ன வார்த்தையால் தான் ஆயிரம் நிலவே வா பாடலை பாடி எஸ் பி பி வாழ்வில் ஒளி வந்தது.
பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கே.ஆர். புரம்…
இன்றைய காலகட்டத்தில் Instagram, YouTube, Facebook போன்ற சமூக வலைதளங்கள் பலருக்கு வருமானத்தையும் புகழையும் தரும் முக்கிய தளங்களாக மாறியுள்ளன.…
உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட கொடூரமான தீ விபத்து,…
மைசூரு மாவட்டத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம்,…
திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையில் நடைபெற்றதாக கூறப்படும் 634 கோடி ரூபாய் பொறியாளர்கள் நியமன ஊழல் வழக்கில், தற்போதைய…
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மற்றும் எதிர்க்கட்சிகளின் புகார்களுக்குப் பதிலளித்து தமிழக முதல்வர் விஜய் இன்று…