Categories: சினிமா

நீங்க சினிமாவுக்கு தகுதியான ஆளே இல்ல.. ரஜினி சொன்ன வார்த்தை.. வருத்தத்துடன் குழம்பிய 90ஸ் நடிகை ரேகா..!

Spread the love

தமிழ் சினிமாவில் 90களில் டீச்சர் என்றால் ரசிகர்களை நினைவுக்கு வருவது ரேகா தான். சத்யராஜ் நடிப்பில் வெளியான கடலோர கவிதைகள் என்ற திரைப்படத்தில் ஜெனிஃபர் டீச்சராக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். காவலன் அவன் கோவலன் மற்றும் புன்னகை மன்னன் ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போதும் தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இறுதியாக பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் அம்மாவாக நடித்திருந்தார். நடிகை ரேகா கடந்த 1996 ஆம் ஆண்டு ஜார்ஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்தது.

தற்போது சினிமாவை விட்டு விலகி இருந்தாலும் ரேகா ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் ரேகா சமீபத்தில் அளித்த youtube பேட்டியில் ரஜினி பற்றி பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், ரஜினியுடன் ஒரு படத்தில் கூட ஹீரோயினியாக நடிக்கவில்லையே என்ற வருத்தம் இன்னும் எனக்குள் இருக்கு. அதுவும் அவருடைய தற்போதைய படங்களை பார்க்கும் போது ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் ஆவது அவருடன் நடித்தாக வேண்டும் என்ற ஏக்கம் இன்றும் உள்ளது.

ஆனால் ஒருமுறை அவருடன் பேசிய போது சில நாட்களிலேயே அவருடைய காதல் முதல் திருமணம் வரை வாழ்க்கை பற்றிய அனைத்தும் என்னிடம் கூறிவிட்டார். அதே சமயம் என்னுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, ரேகா நீங்க சினிமாவுல இருக்க வேண்டிய ஆளே இல்ல, ரொம்ப இன்னசென்ட் என்று பேசினார். உடனே நான், ஏன் சார் எனக்கு தகுதி இல்லையான்னு கேட்டேன். இல்லம்மா நான் அப்படி சொல்ல வரல உன்னோட கேரக்டர் வேற மாதிரி இருக்கு நீ சினிமாவுல இருக்க வேண்டிய ஒரு கேரக்டரே இல்ல, ரொம்ப நல்ல பொண்ணு இன்னசென்ட்டா இருக்க என்று கூறினார். ரஜினி எப்பவுமே கிரேட் தான் என்று ரேகா பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

“விஜய்யை அன்ஃபாலோ செய்தாரா த்ரிஷா..? தீயாய் பரவும் பிரேக்-அப் வதந்தி… இன்ஸ்டாகிராமில் வெடித்த ‘மர்ம’ உண்மை…!!”

நடிகர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு த்ரிஷா அவருக்கு வாழ்த்து தெரிவிக்காததும், அவரை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துவிட்டதாக எழுந்த வதந்திகளும்…

8 minutes ago

“சார்… பேட்டரி சார்ஜ் செய்ய காசு இல்ல” கையேந்தி பிச்சை எடுக்கும் ரோபோ… சீனத் தெருக்களில் நடந்த பகீர் கூத்து..!!

சீனாவின் சிச்சுவான் மாகாணத் தெருக்களில் மனிதனைப் போன்ற தோற்றம் கொண்ட 'ஹியூமனாய்டு' ரோபோ ஒன்று மண்டியிட்டு, கைகளைக் கூப்பி பிச்சை…

8 minutes ago

“‘உங்க குடும்பத்தை ஏன் சார் நடுத்தெருவுல விட்டீங்க..? விஜய் கொடுத்த அடியில் ஆடிப்போன திமுக… குடும்ப விஷயத்தை கையிலெடுத்த திமுக.. வெடிக்கும் தமிழக அரசியல்..!!

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய் "டாஸ்மாக் கட்சி நிதி" எனக் குறிப்பிட்டதாகக் கூறி திமுக…

12 minutes ago

பெற்றோர்கள் மகிழ்ச்சி… அரசு மருத்துவமனையில்.. குழந்தை பிறந்தால் 1 கிராம் தங்கம்… தவெக அரசின் ‘தாய்மாமன்’ திட்டம்… யாருக்கெல்லாம் கிடைக்கும்…? முழு விவரம் உள்ளே…!

தமிழக வெற்றி கழகம் தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை வழங்கி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.…

22 minutes ago

உங்க உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்… ஆதாரம் இருந்தா நிரூபிங்க… தவெகவிற்கு சேகர் பாபு சவால்..!!

சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, தங்களைப் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்று கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அதன்…

25 minutes ago

மீண்டும் வருகிறது 1997 பேரழிவு..? “தலைகீழாக மாறப்போகும் உலக வானிலை” பசிபிக் பெருங்கடலில் நாசா கண்டறிந்த ஆபத்து..!!

பசிபிக் பெருங்கடலில் கடல் மட்டமும், வெப்பநிலையும் மிக வேகமாக உயர்ந்து வருவதை நாசாவின் 'Sentinel-6' செயற்கைக்கோள் கண்டறிந்துள்ளது. இது 'சூப்பர்…

29 minutes ago