BREAKING: பாடகி எஸ்.ஜானகி காலமானார்…. அதிர்ச்சியில் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகம்….!

By SATHISH R on ஆடி 11, 2026

Spread the love

திரையிசையின் முடிசூடா ராணியும், ‘இசைக்குயில்’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி (88) அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மைசூரில் காலமானார் என்ற செய்தி ஒட்டுமொத்த இசை உலகையும், கோடிக்கணக்கான ரசிகர்களையும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 20-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 40,000-க்கும் அதிகமான தேனிசைப் பாடல்களைப் பாடி, பல தலைமுறைகளாகத் தன் காந்தக் குரலால் இந்தியத் திரையுலகை ஆட்டிப்படைத்தவர்.

குழந்தைக் குரல் முதல் முதியவர் குரல் வரை எந்தவொரு கதாபாத்திரத்திற்கும் தன் குரல் வளத்தால் உயிர் கொடுத்து, உணர்வுகளைப் பாடிய அவரின் இந்த பேரிழப்பு, இசையுலகில் ஈடு செய்ய முடியாத ஒரு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையிசையின் ஒரு சகாப்தமாகத் திகழ்ந்த மகா கலைஞரின் மறைவுக்கு எமது ஆழந்த இரங்கல்கள்! அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.