அரை நூற்றாண்டு காலமாக தமிழ் ரசிகர்களை வசியப்படுத்திய இந்த பிரபலம் யாருன்னு தெரியுதா..?

By Begam

Published on:

இந்திய ரசிகர்களால் இசைக்குயில் என்று கொண்டாடப்பட்டவர் தான் பாடகி லதா மங்கேஷ்கர். தனது தேனிசை குரலால் ரசிகர்களை மயக்கிய இவர்  மத்திய பிரதேசத்தின் இந்தூரில் 1929 ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை தீனாநாத் மங்கேஷ்கர், மராத்தி மொழியில் நன்கு அறியப்பட்ட பாடகராக வலம் வந்தவர்.

   

இவருக்கு பிறந்த ஐந்து குழந்தைகளில் முதல் குழந்தை தான் லதா மங்கேஷ்கர். இவரது இயற்பெயர் ஹேமா. தந்தையின் நாடகங்களில் லத்திகா எனும் பாத்திரத்தில் நடித்து வந்ததால் அனைவரும் ‘லதா’ என அழைக்கத் தொடங்கி உள்ளனர்.கடைசியில் இதுவே அவரது பெயராகிப்போனது. 1949ஆம் ஆண்டு மகள் எனும் இந்தி படத்தில் முதன்முறையாக பாடலை பாடி திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

3 முறை தேசிய விருதையும், இந்திய சினிமாவில் மிகவும் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதை 1989ல் பெற்றார். இந்தியாவின் மிகவும் உயரிய விருதான ‘பாரத ரத்னா விருது’ 2001ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.  இதற்கு முன்னதாக அவர் ‘பத்மவிபூஷன் மற்றும் பத்ம பூஷன்’ ஆகிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

இப்படி திரையுலகை தனது கந்த குரலால் வசீகரித்த இவரை கொரோனா தொற்று ஆட்கொண்டது. இதனால் அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி தனது 92-வது வயதில் இயற்கை எய்தினார். தற்பொழுது அவரின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.