அந்த விஷயத்துக்காக ஜி.வி பிரகாஷ் என் பெயரை மாத்தினாரு… பாடகர் கிரிஷ் சொன்ன சுவாரஸ்ய தகவல்..!

By Soundarya on மார்கழி 23, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய பாடல்களால் ஏராளமான ரசிகர்களை கட்டி போட்டவர் தான் பாடகர் கிரிஷ். வங்கி ஊழியரான இவரது தந்தைக்கு அமெரிக்காவில் பணியிட மாறுதல் கிடைத்த நிலையில் இவரின் குடும்பம் அமெரிக்காவிற்கு சென்றது. ஏறத்தாழ பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அங்கு தொடர்ந்த இவர் அங்கு சினிமாவில் நடிப்பதற்கான படிப்பை படித்து முடித்தார். பிறகு சென்னை திரும்பிய கிரிஷ் இசையமைப்பாளர் கணேஷ் குமாரின் ஆல்பத்திலும் மேடைகளிலும் பாடிக் கொண்டிருந்தார்.

#image_title

இதனைத் தொடர்ந்து கணேஷ்குமார் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உடன் இவரது குரல் வளத்தை பற்றி சொல்ல அதன் பிறகு இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இவர் தற்போது முன்னணி பாடகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

   
   

 

கடந்த 26 ஆம் ஆண்டு வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் வரும் மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளது பளிச்சிடும் விளக்குகள் பகல் போல காட்டுதே என்ற பாடலில் ஹரிஹரனுடன் சேர்ந்து பாடி தன்னுடைய முதல் பட வாய்ப்பு பெற்றார். அடுத்து 2007 ஆம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே திரைப்படத்தில் இன்றும் பலருக்கு பிடித்த உன்னாலே உன்னாலே பாடலை பாடியிருப்பார். இப்படி பிரபலமானார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய இவர், என்னுடைய உண்மையான முழு பெயர் விஜய் பாலகிருஷ்ணன். சினிமாவில் நெறைய பேருடைய பெயர் விஜய் விஜய் என்று இருக்கிறது என்று சொல்லி ஜிவி பிரகாஷ் தான் மாற்றினார். நான் எப்பவுமே இனிஷியல் வைக்க மாட்டேன். சும்மா ஒரு பேச்சுக்கு கிறிஸ்னு பேரு வச்சிக்கோன்னு சொன்னார். அதுக்கப்புறம் தான் கிளிக் அடிச்சு தூக்கியது என்று கூறியுள்ளார்.