இயக்குனர் அகமது என்றென்றும் புன்னகை, மனிதன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் இறைவன். இந்த படத்தில் நயன்தாரா நரேன், ராகுல் போஸ், வினோத் கிசன், சார்லி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்தது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
இறைவன் படத்தின் போஸ்டர்களும், ட்ரைலர்களும் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. சைக்கோ திரில்லர் பாணியில் உருவான இறைவன் படத்திற்கு சென்சார் போர்டு A சான்றிதழ் கொடுத்திருந்தது. அந்த அளவிற்கு படத்தில் ரத்த காட்சிகள் நிறைந்திருந்தது. படமும் வெளியாகி விட்டது. இந்நிலையில் வலைப்பேச்சு அந்தணன் அளித்துள்ள பெட்டியில், இந்த படத்தில் நயன்தாராவிற்கு 15 நாட்கள் டேட்டாம். 15 நாளுக்கு 8 கோடி சம்பளமாம். இதில் முதல் 2 நாட்கள் சரியாக ஷூட்டிங்கிற்கு வந்தாராம்.
இரண்டாவது நாள் இயக்குனரை அழைத்து இதுமாதிரி எனக்கு காலைல ஷூட்டிங்க் வர முடியாது. மதியம் 2 டு 10 தான் வருவேன். அதுக்கு ஏத்த மாதிரி மாத்துங்கன்னு சொன்னாராம். இதனால் மத்தவங்களுடையதும் பாதிக்கப்படும் என்று அசிஸ்டன்ட் டைரக்டர் ஒருவர் கேட்டதற்கு நீ சினிமாவுல எத்தனை வருஷம் இருக்க, நான் எத்தனை வருஷம் இருக்கேன் நா அப்படினு சன்டை போட்டாராம்.
இப்படி ஒவ்வொரு நாளும் இயக்குனர் நயன்தாராவால் ரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டு தான் முடித்தாராம். கடைசி நாள் ஷூட்டிங் முடித்து போகும்போது கூட போட்டோ எடுக்க இயக்குனர் வரவில்லையாம். ஆனால் இதனால் நம்ம பெயர் கெட்டுவிடும் என்பதற்காக நயன்தாரா அவர் வரும் வரை காத்திருந்து போட்டோ எடுத்துவிட்டு வந்தாராம். திரையில் பார்க்கும் நயன்தாரா வேறு மாதிரி. திரைக்கு பின் இப்படி இருக்கிறார் என்று கூறியுள்ளார்.