விஜய் போன் பண்ணி எடுக்காத ஒரே ஆள் அவர்தான்… உண்மையை உளறிய பிரபலம்..!

By Nanthini on ஆனி 13, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் பயணிக்க தொடங்கியுள்ள நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தை முடித்த கையோடு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார். அதனால் இந்த திரைப்படம் தான் விஜயின் சினிமா கேரியரில் கடைசி திரைப்படம் ஆகும். இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதனிடையே விஜய் என்றால் உதறி தள்ளும் ஆட்கள் யாருமே கிடையாது.

விஜய்யுடன் பாடகர் க்ரிஷ் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம்

   

ஆனால் பிரபல பாடகர் ஒருவர் விஜய் பலமுறை போன் செய்தும் எடுக்காமல் இருந்துள்ளார். அது குறித்து அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். அவர் வேறு யாருமில்லை பிரபல பாடகர் கிரிஷ் தான். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் பலருடைய குரல்களிலும் மிமிக்ரி பேசுவேன். ஒருமுறை எனக்கு விஜய் சார் நிறைய டைம் போன் பண்ணாரு. ஏதோ ஒரு காரணத்தால என்னால எடுக்கவே முடியல. உடனே என்னுடைய மனைவி சங்கீதாவுக்கு போன் பண்ண அவரு எங்க அவன் போன் பண்ணா எடுக்கவே மாட்டேங்குறான் போன கொஞ்சம் கொடு என்று சொல்லி கேட்டாரு. உடனே நான் போன் பேசுனதும் ஏன்டா எவ்வளவு நேரம் ஆகும் போன் பண்ணிக்கிட்டு இருக்கேன் போனை பார்ப்பியா பார்க்க மாட்டியா. நான் போன் பண்ணி எடுக்காத ஒரே ஆள் நீ தாண்டா என்று என்கிட்ட பேசினாரு என கிரிஷ் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.