தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டின் பத்தாம் வகுப்பு விடைத்தாள் நகலை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று பிறந்த தேதியை பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் நகல் பெற மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதன்படி விண்ணப்பித்த மாணவ மாணவிகள் வருகின்ற ஜூன் 17ஆம் தேதி வரை அரசு தேர்வுகள் இணையதளத்தில் தங்களுடைய விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மேற்கண்ட அதே இணையதளத்தில் மறு கூட்டலுக்கான விண்ணப்பத்தையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை அந்தந்த மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். ஒரு கூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கான கட்டணத்தை மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். இதற்கான முகவரியும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டணத்தை பொறுத்தவரையில் மறு மதிப்பீட்டுக்கு பாடம் ஒன்றுக்கு 505 ரூபாயும், மறு கூட்டல் செய்ய பாடம் ஒன்றுக்கு 205 ரூபாயும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
