வார விடுமுறை.. சொந்த ஊர் செல்வோருக்கு தமிழக அரசு வெளியிட்ட ஸ்பெஷல் அறிவிப்பு..!

By Nanthini on ஆனி 13, 2025

Spread the love

தமிழகத்தில் பொதுவாகவே வார இறுதி நாட்களில் பேருந்துகளில் மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் வெளியூர்களில் வேலை செய்யும் மக்கள் பலரும் விடுமுறை நாட்களில் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகளில் பயணிக்கின்றனர். இதனால் பயணிகளின் வசதிக்காகவும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும் அரசு சார்பில் ஒவ்வொரு வாரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி வார விடுமுறையை முன்னிட்டு இன்றும் நாளையும் கூடுதலாக 1135 சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகம் இயக்குகிறது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று 385 பேருந்துகளும் நாளை 350 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை மற்றும் நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று மற்றும் நாளை தலை 55 சிறப்பு பேருந்துகளும் மாதாவரத்தில் இருந்து இன்று மற்றும் நாளை தலா 20 பேருந்துகளும் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.