ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி… காண்போரை கலங்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ..!

By Nanthini on ஆனி 13, 2025

Spread the love

குஜராத் மாநில அகமதாபாத் நகரில் இருந்து பிரிட்டன் நாட்டில் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இந்த நிலையில் இந்த விமானம் விபத்துக்குள்ளான பிரத்தியேக சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அந்த சிசிடிவி காட்சி காண்போரை பதற வைக்கிறது. இந்த விமான விபத்தை அடுத்து ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் என குஜராத் மாநிலத்தின் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய இந்த விமானம் அகமதாபாத்திலிருந்து நேற்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் நகருக்கு புறப்பட்டது. ஏர் இந்தியா விமான விபத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் மொத்தம் 242 பயணிகள் பயணித்துள்ளனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது. விமானத்தில் பயணித்த ஒருவர் உயிர் பிழைக்க மற்ற அனைவருமே துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் விமான விழுந்த இடம் மருத்துவக் கல்லூரி வளாகம் என்பதால் அங்கிருந்த மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவர்கள் உட்பட மருத்துவர்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் விமானம் வெடித்து சிதறிய சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.