பின்னணி பாடகர், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டவர் கிஷோர் குமார். 1930-50 காலகட்டத்தில் கிஷோர் குமார் பிரபலமானார். கிஷோர் குமார் கடந்த 1946-ஆம் ஆண்டு ஷிகாரி என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். பின்னர் பிரகாஷ் என்ற இசையமைப்பாளர் ஜித்தி என்ற படத்தில் இடம்பெற்ற பாடலை பாடுவதற்காக கிஷோர் குமாருக்கு வாய்ப்பளித்தார். அதன் பிறகு கிஷோர் குமாருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வந்தது. ஆரம்ப காலகட்டத்தில் இருந்து கிஷோர் பாடும் பாடல்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஹிந்தி திரைப்பட உலகில் கிஷோர் குமார் சூப்பர் ஸ்டார் ஆக மாறினார். 1969-ஆம் ஆண்டுக்கு பிறகு கிஷோர் பாடிய பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகி சாதனை படைத்தது. அந்த காலகட்டத்தில் ராஜேஷ் கண்ணா, சஞ்சீவ் குமார், அமிதாப்பச்சன், மிதுன் சக்கரவர்த்தி, அனில் கபூர் உள்ளிட்ட பல நடிகர்களின் படத்தில் கிஷோர் குமார் பாடியுள்ளார். இந்நிலையில் கிஷோர் குமார் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று தெரியவந்துள்ளது. பொதுவாக பாடல் ரெக்கார்டிங் போது கிஷோர் குமார் இருமல் வருவது போல பாவனை செய்வாராம்.
உடனே கண்ணாடி அறைக்கு வெளிப்புறம் இருக்கும் கிஷோரின் மேனேஜர் ஓகே என கையை காட்டி சிக்னல் கொடுத்த பிறகு கிஷோர் குமார் பாட ஆரம்பிப்பாராம். அது என்னவென்றால் மேனேஜர் கையை காட்டினால் அந்த பாடலுக்கான பேமெண்ட் வந்துவிட்டது என அர்த்தமாம். சிக்னல் வந்த பிறகு கிஷோர் குமார் பாட ஆரம்பிப்பார். வழக்கம் போல ஒரு பாடல் ரெக்கார்டிங் போது கிஷோர் குமார் இருமல் செய்வது போல பேமெண்ட் வந்துவிட்டதா என கேட்டுள்ளார். ஆனால் மேனேஜர் கையை காண்பிக்கவில்லை.
இதனால் பணம் கொடுக்கவில்லை என நினைத்து ரெக்கார்டிங் ஸ்டூடியோவை விட்டு கிஷோர் குமார் வெளியே வந்தார். அதனை பார்த்ததும் மேனேஜர் ஏன் நீங்க பாடாமல் வெளியே வந்தீங்க என கேட்டதற்கு, நீ தானே கையை காண்பிக்கவில்லை. பணம் கொடுக்காமல் எப்படி பாடுவது என கேட்டுள்ளார். அதற்கு மேனேஜர் ஐயா இது நம்ம படம். நம்ம பண்ணுற படத்துக்கு யாரு கிட்ட இருந்து பணம் வாங்குவது? என கேட்டுள்ளார். மற்ற படங்களில் பின்பற்றும் முறையை சொந்த பணத்திற்கே செய்தது தான் நகைச்சுவையாக அமைந்தது. இந்த தகவலை பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.