பிடிகொடுக்காத சூர்யா.. பிரபல ஹீரோவை கமிட் செய்தாரா சுதா கொங்கரா..? வரலாற்று படத்தின் நிலை என்ன ஆகுமோ..!

By Priya Ram on ஜூன் 29, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் சூர்யா. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா படம் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 44 வது படத்தில் சூர்யா நடித்து கொண்டிருக்கிறார். சூர்யா 44 படத்தின் ஷூட்டிங் அந்தமானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Suriya - என்னது புறநானூறு படம் ட்ராப்பா?.. சூர்யா வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் மகிழ்ச்சி | Suriya Explains about Puranaanooru Movie Here are the full details - Tamil Filmibeat

   

கடந்த சில மாதங்களுக்கு முன்னரே சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் புறநானூறு படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூர்யாவை போற்றப்படும் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. ஆனால் புறநானூறு படத்தில் சூர்யா கல்லூரி மாணவனாக நடிப்பதுடன் ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராக நடிப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டது.

   

Sudha Kongara: புறநானூறு படம் குறித்து அச்சத்தை வெளிப்படுத்திய சுதா கொங்கரா.. எப்படி உருவாகும்? | Director Sudha kongara expressed her fear about Suriya 43 movie - Tamil Filmibeat

 

அதற்கு சூர்யா மறுப்பு தெரிவித்து புறநானூறு படத்திலிருந்து விலகி விட்டார். இதனால் புறநானூறு படம் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே சூர்யா சுதா கொங்கராவை தொடர்பு கொண்டு வேறு ஒரு கதையை ரெடி பண்ணுங்க நாம் கண்டிப்பாக இணைந்து நடிக்கலாம் என கூறியதாக தெரிகிறது.

தனுஷ் மகன் யாத்ராவின் 12ஆம் வகுப்பு மதிப்பெண் இவ்வளவா? - வைரலாகும் தகவல் – News18 தமிழ்

ஆனால் சுதாகர் புறநானூறு படத்தை முடித்துவிட்டு தான் எந்த படத்தையும் எடுப்பேன் என கரராக கூறிவிட்டாராம். இந்நிலையில் புறநானூறு படத்தில் பிரபல நடிகர் தனுஷ் நடிக்க ஆர்வம் காட்டுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம். இதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.