தமிழ் சினிமாவில் 80’ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வளம் வந்த ஸ்ரீஜா. தற்போதைய போட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார்.
நடிகை ஸ்ரீஜா இவரைப் பற்றி இன்றைய தலைமுறை நேரத்தில் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. 1988 முதல் 1994 வரை தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் மிக முக்கிய திரைப்படங்களில் நடித்தவர். கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர் 1982 ஆம் ஆண்டு தனது 11 வயதில் ஸ்ரீஜா நிதி என்ற மலையாள திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்குள் அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தை தொடர்ந்து 3 வருடம் கழித்து முத்தம் தரம்குந்து என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படி மலையாள சினிமாவில் வரிசை கட்டி நடித்து வந்த இவர் அதன் பிறகு மலையாள சினிமாவில் முக்கிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க தொடங்கினார். இப்படி கேரளாவில் நல்ல வரவேற்பும் நல்ல அறிமுகத்தையும் பெற்றுக் கொண்ட இவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சிறந்த நடிகையாக வளம் வந்தார்.
அதைத்தொடர்ந்து முதன் முறையாக தமிழில் மௌனம் சம்மதம் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் சரத்குமார் மனைவியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து கேஸ் ரவிக்குமாரின் சேரன் பாண்டியன் என்ற திரைப்படத்தில் நடித்தார். புரியாத புதிர் என்ற முதல் படத்திற்கு பிறகு கே எஸ் ரவிக்குமார் இயக்கிய இந்த திரைப்படத்தில் விஜயகுமாரின் மகளாக நடித்திருப்பார்.
இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. 90களில் ஆரம்பத்தில் தமிழ் மலையாள உள்ளிட்ட திரைப்படங்களில் சிறந்த நடிகையாக வலம் வந்த இவர் 1993 ஆம் ஆண்டு சந்திர பாண்டியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் எம்ஜிஆர் அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக இருந்த அரங்கநாயகனின் மகன். திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகி இருந்த இவர் கடைசியாக 1994 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜாங்கம் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.
இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றார். மிகக் குறுகிய காலத்தில் மிக பிரபல நடிகையாக வளம் வந்த இவர் சினிமாவிலிருந்து விலகியும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகின்றது. தற்போது வரை இவர் என்ன செய்கிறா,ர் எப்படி இருக்கின்றார் என்று எதுவுமே தெரியாது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அதில் பேசியவர் 30 வருடங்களாக எங்கு இருந்தீர்கள் என்ற செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்தவர்.
சென்னையில் தான் இருந்தேன் ஆனால் மீடியாவில் இருந்து சற்று விலகி இருந்தேன் என்று கூறியிருந்தார். படங்களில் நடித்தது குறித்து பேசி இருந்த அவர் எனக்கு மலையாளம் தான் தெரியும் என்பதால் முதலில் தமிழ்த் திரைப்படங்களின் நடிப்பதற்கு தடுமாறினேன் எனக்கு வசனங்கள் பெரிதளவில் புரியாது. அப்போது உதவி இயக்குனராக இருந்த சேரன் தான் மிகப்பெரிய உதவியாக இருந்தார்.
அவர் தான் எனக்கு கஷ்டப்பட்டு வசனங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்தார் என்று கூறிந்தார். மேலும் சேரன் பாண்டியன் திரைப்படத்தில் நடித்தபோது விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவுக்கு மகளாக நடித்திருந்தேன், உண்மையில் அவர்கள் என்னை மகள் போல தான் பார்த்துக் கொண்டார்கள். அவ்வளவு அன்பாக என்னிடம் நடந்து கொண்டார்கள் என்று பல விஷயங்களை பேசி இருந்தார்.. இந்த பேட்டியானது தற்போது வைரலாகி வருகிறது