பிரபல நடிகர் எம்.ஆர் ராதாவின் மகன் தான் ராதா ரவி. இவர் 1976-ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த மன்மத லீலை படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். முன்னதாக பல நாடகங்களில் ராதாரவி நடித்துள்ளார். இதனை அடுத்து டி.ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா என்ற படத்தில் வில்லன் கேரக்டரில் மிரட்டியிருந்தார்.
இதனை தொடர்ந்து உயர்ந்த உள்ளம், சின்னத்தம்பி, வைதேகி காத்திருந்தாள், உழைப்பாளி, குரு சிஷ்யன் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். வீரன் வேலுத்தம்பி படத்தில் ராதாரவி ஹீரோவாக நடித்தார். வெள்ளித்திரை மட்டுமில்லாமல் சின்னத்திரைகளும் ராதாரவி தடம் பதித்துள்ளார். ராதாரவி சகோதரியான ராதிகா செல்லமே என்ற சீரியலை தயாரித்தார்.
இந்த சீரியலிலும் அன்பே வா சீரியல் ராஜா ரவி நடித்தார். இந்த நிலையில் ராதாரவி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் அதிமுக கட்சியில் இணைந்து தேர்தல் நேரங்களில் பிரச்சாரம் செய்தேன். மீட்டிங்கில் கலந்து கொண்டேன். அதிமுக கூட்டங்களிலும் பங்கேற்று பேசுவேன். மீட்டிங் முடிந்த பிறகு சாலை ஓரங்களில் காரை நிறுத்திவிட்டு கட்சிக்காரர்களுடன் மது அருந்தும் பழக்கம் எனக்கு இருந்தது.
இது எப்படியோ ஜெயலலிதா அம்மாவிற்கு தெரிந்து விட்டது. ஒரு நாள் அவர் என்னை அழைத்து சாலையோரம் அமர்ந்து கட்சிக்காரர்களுடன் மது குடிப்பது பற்றி கேட்டார். நானும் ஆமாம் என ஒப்புக்கொண்டேன். நீங்கள் என்னை குடும்பத்தில் ஒருவர் என சொன்னீர்கள் அப்படி நினைப்பது உண்மையாக இருந்தால் இந்த பழக்கத்தை விட்டு விடுங்கள் என சொன்னார். அதோடு மது குடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டேன் என ராதாரவி கூறியுள்ளார்.