இந்த புகைப்படத்தில் தனது அம்மாவுடன் இருக்கும் இந்த குழந்தைதான் தமிழ் சினிமாவை தன் வசம் வைத்திருந்த நடிகை..!!

By admin on ஆனி 30, 2024

Spread the love

80, 90-ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவையே தன்வசம் வைத்திருந்த நடிகை தான் நதியா. முதன் முதலில் தமிழில் பூவே பூச்சூடவா திரைப்படம் மூலம் நதியா தனது திரை பயணத்தை ஆரம்பித்தார். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாள மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

   

 

   

நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை என சொல்லும் அளவிற்கு அந்த காலகட்டத்தில் எந்த பொருளை எடுத்தாலும் அவர் பெயர்தான் இருக்கும். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயம் ரவி அசின் நடித்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் நதியா மீண்டும் என்ட்ரி கொடுத்தார். படத்தில் அவரது நடிப்பு பாராட்டை பெற்று தந்தது.

 

ஹீரோயின்களை மிஞ்சும் நடிகை நதியாவின் மகள்.. புகைப்படம் இதோ - சினிஉலகம்

ஜெயா டிவியில் ஒளிபரப்பான ஜாக்பாட் என்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி நதியா தொகுத்து வழங்கினார். மிர்ச்சி படத்தில் பிரபாஸின் அம்மா கேரக்டரில் நடித்தார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து நதியா ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 1988 ஆம் ஆண்டு மராட்டியரான சிரீஸ் காட்போல் என்பவரை நதியா திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். சோசியல் மீடியாவில் நடிகர் நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் வைரலாகும். அந்த வகையில் நதியா தனது தாயுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நதியாவா இது? சிறுவயதிலும் அவ்வளவு அழகாக இருக்கிறாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

என் அழகின் ரகசியம் இதுதான்- நடிகை நதியா சொன்ன சீக்ரெட்ஸ் - லங்காசிறி நியூஸ்