விட்டதை பிடித்து வசூலில் கம்பேக் கொடுத்த கல்கி 2898 AD.. 3-வது நாளில் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

By Mahalakshmi on ஆனி 30, 2024

Spread the love

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி திரைப்படம் 3-வது நாளிலும் 100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் ஃபேண்டஸி திரைப்படமாக உருவானது கல்கி 2898 ஏடி. இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த 27ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க கமலஹாசன், அமிதாபச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

   

   

படத்திற்கு ரிலீசுக்கு முன்னதாகவே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தது. மேலும் புதிய புத்தகங்கள் மற்றும் 37 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டு வந்தது. முதல் நாள் மட்டுமே இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 191.5 கோடி வசூல் செய்திருந்தது. இரண்டாவது நாளில் மொத்தமாக 298 கோடி வசூல் செய்திருந்தது.

 

முதல் நாளை விடை இரண்டாவது நாள் வசூல் குறைந்த நிலையில் பட குழுவினர் சற்று அதிர்ச்சி அடைந்தாலும் வரும் நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மிகப்பெரிய அளவில் வசூல் இருக்கும் என படக்குழுவினர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் படக்குழுவினர் உலகம் முழுவதும் படம் செய்த வசூலை மட்டும் குறிப்பிட்டு இருந்த நிலையில் இந்தியாவில் எவ்வளவு வசூல் என்பதை குறிப்பிடவில்லை.

கல்கி திரைப்படம் 2டி, 3d மற்றும் imax திரையிலும் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு வருகின்றது. ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் ரிலீஸ் ஆனது. மும்பையில் இப்பபடத்தின் டிக்கெட் 2300 க்கு விற்பனையானது. படம் வெளியாகி தொடர்ந்து மக்களிடையே பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் கட்டாயம் இந்த திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்று பட குழுவினர் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் 3-வது நாளாக இப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது. அதன் படி இந்தியாவில் மட்டும் இந்த படம் 67 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த வசூல் நேற்றைய வசூலை விடவும் 16 சதவீதம் அதிகம் என்று கூறப்படுகின்றது. தெலுங்கில் இந்த திரைப்படம் ரூபாய் 32 .25 கோடி ரூபாயும், தமிழில் 5 கோடி ரூபாயும், ஹிந்தியில் 27 கோடி ரூபாயும், கன்னடத்தில் 45 லட்சமும், மலையாளத்தில் 2.4 கோடி வசூல் செய்துள்ளது. மொத்தமாக இது திரைப்படம் 100 கோடிகளை வசூல் செய்யும் என கூறப்படுகின்றது.