பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி… ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

By Nanthini on பங்குனி 5, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முக்கிய பின்னணி பாடகி களில் ஒருவர்தான் கல்பனா. ராசாவின் மனசுல படம் தொடங்கி வரலாறு, மைனா, ரஜினி முருகன் மற்றும் மாமன்னன் என இவர் பல படங்களில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முக்கிய பாடகியாக வலம் வந்தார். அங்கும் முன்னணி ஹீரோ படங்களில் பாடல்களை பாடியுள்ளார். மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கூட இவர் பாடல்களை பாடியுள்ளார். இதனிடையே இவர் ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹைதராபாத்தில் நிஜாம் பேட் பகுதியில் இவர் வசித்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என கூறப்படுகிறது.

Kalpana Raghavendar Ya dabdab wa dallaa (Arabic Song) - YouTube

   

இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவருக்கு போன் செய்த நிலையில் எடுக்கவில்லை. அவருடைய கணவர் வேலை விஷயமாக சென்னை வந்திருந்த நிலையில் அவரிடமும் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். பிறகு அவரும் தன் மனைவி கல்பனாவுக்கு போன் செய்த நிலையில் அவராலும் தன் மனைவியை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவி இடத்திற்கு விரைந்த போலீசார் கல்பனா வீட்டின் கதவை உடைத்துக் கொண்டே உள்ளே சென்று பார்த்தபோது கல்பனா வீட்டில் சுயநினைவின்றி கிடந்துள்ளார்.

   

Breaking: பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி.. வீட்டின் கதவை உடைத்து  மீட்ட அதிகாரிகள்., மருத்துவமனையில் அனுமதி.! - Tamil Spark

 

 

உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் கல்பனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எதற்காக இதுபோல தற்கொலை முடிவு எடுத்தார் இதற்கு வேறு யாராவது காரணமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரபல பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்றது சினிமா வட்டாரத்தில் பரபரப்பு கிளப்பியுள்ளது.