இனி என்னை யாரும் அப்படி கூப்பிடாதீங்க.. நயன்தாரா வெளியிட்ட திடீர் அறிக்கையால் ஷாக்கான ரசிகர்கள்..!

By Nanthini on பங்குனி 5, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளுக்கு புனைப்பெயர் வைப்பது அவர்களுக்கு பட்டங்கள் வழங்குவதைப் போல பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் அன்பால் கிடைக்கும் பரிசாக பார்க்கின்றனர். மக்கள் தலைவன், நடிகர் திலகம், சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் என அடுத்தடுத்து நடிகர்கள் பலவிதமாக கொண்டாடப்பட்டாலும் நடிகைகளுக்கு கனவு கன்னி என்ற பெயரோடு முடிந்து விடும். ஆனால் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படக்கூடிய ஒரே நடிகை நயன்தாரா தான். ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா இரண்டாவது படத்திலேயே ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Don't call yourself a "lady superstar" - actress Nayanthara requests | தன்னை “லேடி சூப்பர் ஸ்டார்” என அழைக்க வேண்டாம்- நடிகை நயன்தாரா வேண்டுகோள்

   

அதன் பிறகு ஆதவன், பில்லா மற்றும் ராஜா ராணி என தொடர் வெற்றி படங்களை கொடுத்தார். தனிப்பட்ட காரணங்களால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நயன்தாரா இரண்டாவது முறையாக கம்பேக் கொடுத்து தன்னுடைய மார்க்கெட்டை உயர வைத்தார். ரசிகர்களால் செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா தற்போது தன்னை யாரும் அப்படி அழைக்க வேண்டாம் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

   

லேடி சூப்பர்ஸ்டார்' பட்டத்தை துறந்தார் நயன்தாரா! | Nayanthara says not to call her lady superstar - kamadenu tamil

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் வாழ்க்கை எப்போதும் ஒரு சிறந்த புத்தகமாக இருந்துள்ளது. உங்களுடைய அன்பும் ஆதரவும் தான் அதனை அழகு சேர்த்து உள்ளது. என் வெற்றியின் போது என் தோளில் சாய்த்து பாராட்டியதோடு கடினமான தருணங்களில் என்னை தூக்கி நிறுத்தவும் நீங்கள் எப்போதும் இருந்தீர்கள். நீங்கள் பலரும் என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்புடன் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளீர்கள். உங்களுடைய பெயர் ஆதரவால் உருவான இந்த பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.

nayan

ஆனால் இனிமேல் என்னை நயன்தாரா என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். என் பெயர் தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று என்று நயன்தாரா தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக அஜித் மற்றும் கமல் ஆகியோர் தங்களுடைய பெயருக்கு முன்னால் புனை பெயர்களை வைத்து அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அன்பு கட்டளை இட்ட நிலையில் தற்போது அந்த வரிசையில் நயன்தாராவும் இணைந்துள்ளார்.