கமலுக்கும் பிரகாஷ்ராஜுக்கும் வெள்ளி தட்டுல தான் சாப்பாடு போட்டோம், காரணம்… மனம் திறந்த தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்..!

By Nanthini on பங்குனி 5, 2025

Spread the love

கமல்ஹாசன் நடிப்பில் கௌதம மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் வேட்டையாடு விளையாடு. கடந்த 26 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதற்கு முன்பு கௌதமேனன் இயக்கத்தில் வெளியான மின்னலே மற்றும் காக்க காக்க ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாகும். எனவே தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனரான கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிக்கிறார் என்றதும் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அன்றைய காலகட்டத்தில் இளம் இயக்குனரான கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பது கோலிவுட் வட்டாரத்தில் பேசு பொருளாக இருந்தது. கௌதம் மேனன் கமலின் தீவிர ரசிகர். கமலின் அதிதீவிர ரசிகரான கௌதம் மேனன் வேட்டையாடு விளையாடு படத்தை செதுக்கி இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

வேட்டையாடு விளையாடு வெற்றி.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு | Tamil cinema vettaiyadu vilayadu movie success

   

அதற்கு முன்பு கமலை பல்வேறு கெட்டப்களில் மற்றும் கதாபாத்திரங்களில் பார்த்திருந்தாலும் வேட்டையாடு விளையாடு படத்தில் கமலை பார்க்கும்போது புதிதாக இருந்தது. கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை கௌதமேனன் இயக்கியிருந்த நிலையில் மாணிக்கம் நாராயணன் தயாரித்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான படத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ராகவன் கதாபாத்திரத்தில் கமல் நடிக்க இவருடைய நண்பரும் சக அதிகாரையுமாக ஆரோக்கியராஜ் கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார். ஆனால் முதலில் இந்த பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நடிகர் வேறு ஒருவர்தான்.

   

Blockbuster movie Vettaiyaadu Vilaiyaadu completes 15 years, fans celeberates in social media | 15 Years of Vettaiyaadu Vilaiyaadu: ‛தம்பி கேட்டை மூட்றா.. இளா அமுதா... மஞ்சள் வெயில் மாலையிலே...' மறக்க ...

 

அது குறித்து சமீபத்தில் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். அதில், கமலுடன் ஸ்ரீஹரி என்ற ஒரு நபரை வைத்து ஷூட்டிங் எடுத்தாங்க. அந்த ஆள் நடிக்கிற மாதிரி இருந்தா நான் படம் எடுக்க மாட்டேன் என்று சொல்லிட்டேன். நிறைய சீன் எடுத்தாச்சு என்று சொன்னதும் பரவால்ல ஏர்போர்ட் சீன் தானே விட்டு தள்ளுங்க என்று நான் சொல்லிட்டேன். பிறகு சத்யராஜ் கிட்ட பேசினதும் அவர் முடியாது என்று சொல்லிட்டாரு. இறுதியாக நான் பிரகாஷ்ராஜ் கிட்ட பேசினேன். நான் உங்களை ஒரு படத்துல நடிக்க வைக்கிற மறுப்பு சொல்லாம நடிக்கணும் என்று சொன்னதும் அவரும் சரின்னு சொல்லிட்டாரு. ஆனா சம்பளம் கம்மியா தான் கொடுப்பேன் என்று சொல்லிட்டேன். சரி என்று சொன்னதும் ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் பிரகாஷ்ராஜ் போட்டாரு.

அஜித்தை மனிஷனாவே நினைக்கல!! வன்மத்தை கொட்டும் பிரபல தயாரிப்பாளர்.. - விடுப்பு.கொம்

அதாவது கமல் எந்த டைமுக்கு வர்றாரோ அதே டைம் தான் நானும் வருவேன் என்று சொன்னார். சரின்னு சொல்லிட்டு கமல்ஹாசன் கிட்ட கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க சரியான நேரத்துக்கு மட்டும் வந்துருங்க என்று பேசிட்டேன். ரெண்டு பேரும் சூட்டிங் வந்ததும் லெஜன்ட் என்பதால் இருவருக்குமே வெள்ளித்தட்டு வெள்ளி டம்ளர் வச்சி தான் சாப்பாடு போட்டோம். எதற்கு இதெல்லாம் என்று கேட்பார்கள். இதெல்லாம் ஒரு மரியாதை தான் என்று சொல்வோம் என்று வேட்டையாடு விளையாடு படப்பிடிப்பில் நடந்த சம்பவத்தை மாணிக்கம் நாராயணன் பகிர்ந்துள்ளார்.