போடு… பாடகர் பாலியன் கொலை வழக்கில்… போலீசாரின் அதிரடி என்கவுன்டர்… சுருண்டு விழுந்த கொடூரக் குற்றவாளிகள்… ஹரியானாவில் பரபரப்பு…!

By Swetha on ஆவணி 31, 2026

Spread the love

ஹரியானா பாடகர் அங்கீத் பாலியன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சுமித் மற்றும் மோகித் என்ற இரண்டு கூலிப்படையினர், திங்கள்கிழமை காலை காவல்துறை நடத்திய என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் தலா 50,000 ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகள் ஆவர். சோனிபட்டைச் சேர்ந்த இவர்கள் கோகி கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

படுகொலைக்குப் பிறகு தப்பியோடிய இருவரும், பாக்வத் மற்றும் லோனி வழியாக சோனிபட்டுக்குத் தப்பிக்க முயன்றபோது தொழில்துறை பகுதியில் போலீசாரால் முற்றுகையிடப்பட்டனர். அப்போது அவர்கள் காவல்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதால், போலீசார் தற்காப்புக்காக நடத்திய பதில் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தனர். இந்த மோதலில் இரண்டு போலீசாரும் காயமடைந்தனர்.

   

https://twitter.com/HateDetectors/status/2094328944866771325/video/1

   

இக்கொலை வழக்கில் மொத்தம் நான்கு பேர் சம்பந்தப்பட்டிருந்த நிலையில், தற்போது இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மீதமுள்ள சத்யம் மற்றும் ஆர்யன் ஆகிய இரு தேடப்படும் குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் துப்பு துலக்குதல் மூலம் கிடைத்த நுண்ணறிவுத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.