தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகர்களில் ஒருவர்தான் அந்தோணி தாஸ். கருணாஸ் நடித்த திண்டுக்கல் சாரதி என்ற திரைப்படத்தில் திண்டுக்கல்லு திண்டுக்கல்லு என்ற பாடல் மூலம் சினிமாவில் பாடகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சூது கவ்வும், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, முண்டாசுப்பட்டி உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் அற்புதமான பாடல்களை பாடியுள்ளார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளும் நடுவராகவும் இருந்தார். சினிமாவில் ரசிகர்களை கவரும் வகையில் அற்புதமான பாடல்களை பாடிவரும் அந்தோணி தாஸ் நாட்டுப்புற கலைஞர் ரீட்டா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும் உள்ளார். அவரின் மகள் கடந்த வருடம் தான் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பட்டதாரி ஆனார்.
இந்த நிலையில் அந்தோணி தாஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் சிறுவயதில் பட்ட கஷ்டங்கள் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அதில், நான் சின்ன வயசா இருக்கும்போது எங்க அப்பாவோட அம்மா, எங்க அப்பத்தாவுக்கு கண்ணு தெரியாது. எங்க தாத்தாவும் விட்டுட்டு போயிட்டதால தனியாலா எங்க அப்பாவை வளர்த்து நாங்க. நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது நாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம். எங்க அப்பத்தா பல இடத்துல யாசகம் வாங்கி தான் எனக்கு சாப்பாடே தருவாங்க. தீபாவளி டைம்ல கூட என் தலை மேல ஒரு பாத்திரத்தை வைத்துவிட்டு என் அப்பா என் கைய புடிச்சுகிட்டு பின்னாடியே வருவாங்க.
வீடு வீடா போய் யாசகம் கேட்கும் போது அவங்க இனிப்பு பலகாரம் எல்லாம் எங்களுக்கு தருவாங்க. உடனே எங்க அப்பத்தா எடுத்து சாப்பிட்டுக்கோ சாப்பிட்டுக்கோ என்று சொல்லிக்கொண்டே வருவாங்க. ஒரு கட்டத்தில் என்னால் அதிகமாக சாப்பிட முடியாமல் கீழே போட்டுக்கிட்டே வருவேன். அத பாத்த எங்க அப்பா உண்மையை சொல்லு எல்லாத்தையும் என்ன பண்ண என்று கேட்டு அடிப்பாரு. போய் எல்லாத்தையும் பொறுக்கிட்டு வா என்று சொல்லி அனுப்பி வைப்பாரு. அது எல்லாத்தையும் நான் எடுத்துட்டு வந்து கொடுத்த பிறகு அதில் இருக்க மண்ணை தட்டிட்டு சாப்பிடுவாங்க இல்லன்னா வீட்ல குழம்பில் அதை போட்டு சமைப்பாங்க.
நான் வளர்ந்ததுக்கு அப்புறம் எங்க அப்பா நாதஸ்வர கலைஞர் எங்க அம்மாவும் கூலி வேலைக்கு தான் போயிட்டு இருந்தாங்க. தீபாவளி டைம்ல எல்லார் வீட்டுலயும் பட்டாசு வெடிச்சுட்டு இருப்பாங்க. எங்க அப்பா வேலைக்கு போயிட்டு எப்ப வருவார் என்று நானும் எங்க அக்காவும் வாசலையே பார்த்துட்டு இருப்போம். அப்புறம் தெருத்தெருவா போயி அவங்க வெடிச்சது போக கீழே கிடக்கிற பட்டாசை எடுத்துட்டு வந்து நாங்க வெடிப்போம். வெடிக்காத பட்டாசுல இருக்க மருந்து கொட்டி அதையும் வெடிக்க வைப்போம். பக்கத்து வீட்டில கொடுக்கிற பலகாரத்தை வாங்கி சாப்பிடுவோம். சின்ன வயசுல எங்க தீபாவளி இப்படித்தான் இருந்துச்சு என்று தான் பட்ட கஷ்டத்தை அந்தோணி பேசியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…