1957ஆம் ஆண்டு பிஆர் பந்தலு இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் தங்கமலை ரகசியம். சின்ன அண்ணாமலை கதை எழுத நீலகண்டன் வசனம் எழுதிய இந்த படத்தில் சிவாஜி கணேசன், டி ஆர் ராஜகுமாரி மற்றும் ஜமுனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். டி. லிங்கப்பா இந்த படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில் கு.ம. பாலசுப்பிரமணியன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர். குறிப்பாக இந்த படத்தில் வரும் அமுதை பொழியும் நிலவே என்ற பாடலை பி. சுசிலா பாடியிருந்தார்.
)
இந்தப் பாடலை படத்தில் ஜமுனா பாட வேண்டும். அவருக்கு தெரியாமல் ஜன்னல் வழியாக நடிகர் திலகம் சிவாஜி பார்க்க வேண்டும். அந்த வேலையில் தன்னை யாரும் பார்க்க கூடாது என்பதால் ஆதிவாசி வேடத்தில் சிவாஜி வந்திருப்பார். ஆனால் அவரைப் பார்த்துவிட்ட வேலைக்கார பெண் தன் கையில் இருந்த தட்டை கீழே போட்டுவிட்டு கத்தி விடுவார். இந்தப் பாடல் பதிவின்போது சுசிலா அவர்கள் முதல் முறையே சரியாக பாடி இருந்தாலும் வேலைக்கார பெண் கத்துவது போன்று குரல் கொடுப்பவர் சரியாக செய்யாமல் சொதப்பியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/10/19/MyWj1KXXepqIk0MeOCD8.jpg)
இதனால் முதல் முறையே சரியாக பாடிய சுசீலா அவர் செய்த தவறால் இவர் மீண்டும் பாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியே சுசிலா 20 முறை மீண்டும் மீண்டும் இந்த பாடலை பாடியுள்ளார். அதன் பிறகு அந்த பெண் சரியாக கட்டிய நிலையில் பாடல் பதிவு ஒரு வழியாக முடிந்துள்ளது. இது குறித்த தகவலை கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுசிலா ஒரு பேட்டியில் இப்போது நினைத்தாலும் அது வேடிக்கையாக இருக்கிறது என கூறி இருந்தார். இந்தப் பாடல் அப்போது பெரிய வரவேற்பை பெற்றது.
