தமிழ் சினிமாவின் இயக்குனர், நடிகர் மற்றும் பாடகர் என பல திறமைகளுடன் கொடி கட்டி பறந்தவர் தான் நடிகர் டி.ராஜேந்திரன். இவருடைய மகன் தான் சிம்பு. சிறுவயதிலிருந்தே தனது தந்தையுடன் இணைந்து பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தனது தந்தையைப் போலவே இயக்குனர், பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என சிம்பு பல திறமைகளுடன் சினிமாவை கலக்கி கொண்டிருக்கிறார். இவர் 2002 ஆம் ஆண்டு காதல் அழிவதில்லை என்ற திரைப்படம் மூலமாக தான் கதாநாயகனாக அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே இளைஞர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்து கொண்டார்.
)
மேலும் இளம்பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்தார். அதன் பிறகு பல வெள்ளித்திரை படங்களில் நடித்த சிம்பு லிட்டில் சூப்பர் ஸ்டார் என அறியப்பட்டார். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றார். பிறகு ஒரு சில திரைப்படங்கள் தோல்வியை தழுவினாலும் அதன் பிறகு மீண்டும் தனது உடலை மெருகேற்றி ஈஸ்வரன் மற்றும் மாநாடு உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் கம்பேக் குடுத்தார். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான விந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த நிலையில் சிம்பு பற்றி கவிஞர் வாலி ஒரு பேட்டியில் பேசி இருப்பார்.

அது தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது சிம்பு வல்லவன் திரைப்படத்தில் பாட்டு எழுதிய போது லூசு பெண்ணே என்ற தனது முதல் பாட்டிலேயே, வாலி போல பாட்டு எழுத தான் எனக்கு தெரியலையே, உன்ன பத்தி நினைக்காம இருக்க முடியலையே என்று எழுதி இருப்பார். இதனைப் பார்த்ததும் அவர்கிட்டயே நான் நேரடியாக கேட்ட, என்னப்பா உன்னுடைய அப்பாவும் நல்லா தான பாடுவார் உன்னோட முதல் பாட்டிலேயே என்ன பத்தி இப்படி எழுதி இருக்கியே உங்க அப்பா என்ன நினைப்பாரு என கேட்டேன்.

அதற்கு சிம்பு எங்க அப்பா இதை பார்த்துட்டு ரொம்ப நல்லா இருக்குன்னு பாராட்டினார் சார் என கூறினார். அதுபோலவே சிம்பும் ஒரு பேட்டியில் வாரிசார் எனக்காக தம் படத்தில இடம்பெற்ற கலக்குவேன் கலக்குவேன் பாடலில் நான் சொன்னா நம்பு உன் நண்பன் தான் சிம்பு என்ற வரியை எழுதி இருந்தார். அவருக்கு நன்றி கடன் செலுத்துவதற்காகவே வல்லவன் படத்தில் நான் எழுதிய முதல் பாட்டிலேயே அவரைப் புகழ்ந்தேன் என கூறி இருப்பார். இந்த செய்தி தான் தற்போது வைரல் ஆகி வருகிறது.
