ஒரே ஒரு முதலீடு.. மாதம் தோறும் வருமானம் தரும் சூப்பரான எல்ஐசி பாலிசி.. இதோ முழு விவரம்..!

By Nanthini on கார்த்திகை 19, 2024

Spread the love

இன்றைய காலகட்டத்தில் நிம்மதியான எதிர்கால வாழ்விற்காக ஒவ்வொருவரும் திட்டமிட்டு சேமிப்பது என்பது அவசியமான ஒன்று. அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்காமல் எதிர்கால வாழ்வை நிம்மதியாக வாழ சரியான திட்டங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். மக்களுக்காக வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்கள் என பலவற்றில் முதலீடு திட்டங்கள் ஏராளம் உள்ளது. இந்த நிலையில் எல்ஐசியில் இருக்கக்கூடிய சூப்பரான பாலிசி திட்டம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இந்தியாவில் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாக எல்ஐசி உள்ளது. பொதுமக்களுக்கு பலவிதமான நம்பிக்கையான பாலிசி திட்டங்களை இந்த நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது.

Saral Pension Yojana 2024 - केंद्र सरकार ने शुरू की सरल पेंशन योजना, ऐसे  करें आवेदन

   

அதன்படி எல்ஐசியில் உள்ள ஓய்வூதிய திட்டங்களில் பிரபலமான ஒன்றுதான் சாரல் பென்ஷன். ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் போது நிலையான மாதாந்திர வருமானத்தை பெற முடியும். இந்த திட்டம் மாத ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் வழங்குகின்றது. சாரல் பென்ஷன் திட்டத்தின் முக்கியமான அம்சம் என்னவென்றால் இந்த திட்டத்தில் ஒரு முறை முதலீடு செய்தால் மட்டும் போதும். ஓய்வூதிய தொகையை வாழ்நாள் முழுவதும் பெற முடியும். சாரல் டென்ஷனில் அரசு அல்லது தனியார் துறையில் பணியாற்றினாலும் இணையலாம். அவர்களும் இந்த திட்டம் மூலமாக வாழ்நாள் முழுவதும் மாதாந்திர ஓய்வூதிய பலனை அனுபவிக்க முடியும்.

   

LIC's Saral Pension scheme launched: Who can buy, how much regular income  you will get, other details - The Economic Times

 

இதில் ஓய்வு பெற்றதும் கிடைக்கும் பிஎஃப். நிதி மற்றும் பணக்கொடையாகியவற்றையும் முதலீடு செய்ய முடியும். அவ்வாறு செய்தால் மாதாந்திர ஓய்வூதியத்தை இந்த திட்டம் மூலம் பெறலாம். 40 வயதிற்கு உட்பட்ட தனி நபர்கள் எல்ஐசி சாரல் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது. 40 வயதுக்கு மேல் 80 வயது வரை உள்ள அனைவரும் எந்த நேரத்திலும் இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யலாம். குறைந்தபட்சம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை சாரல் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்து தொடங்கலாம்.

LIC Saral Pension Plan: இந்த பாலிசி எடுத்தா மாதம் ரூ.12,000 பென்ஷன் வரும்!  எல்ஐசியின் சூப்பர் திட்டம்!

இதில் காலாண்டு மற்றும் அரையாண்டு அடிப்படையில் கூட முதலீடு செய்ய முடியும். இதில் முதலீட்டு தொகைக்கு உச்சவரம்பு எதுவும் கிடையாது. அரையாண்டு, காலாண்டு அல்லது மாதம்தோறும் ஆண்டு முழுவதும் பிரிமியம் செலுத்திய பின்னர் ஓய்வூதிய பலனை நீங்கள் பெற முடியும். 42 வயதுடைய ஒருவர் ஒரே நேரத்தில் 30 லட்சம் முதலீடு செய்யும் போது மாத ஓய்வூதியமாக 12388 ரூபாய் தொகையை பெறலாம். மேலும் இந்த திட்டத்தில் கடன் பெறுவதுடன் மருத்துவ உதவிகளுக்கு பணம் பெரும் வசதியும் உள்ளது. பாலிசி தொடங்கி ஆறு மாதங்களுக்குப் பிறகு கடன் பெற்றுக் கொள்ளலாம். நிலையான மாதாந்திர ஓய்வூதியம் பெற விரும்புபவர்களுக்கு சாரல் பென்ஷன் திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும்.