வடிவேலு ஒரு Gang வச்சிருந்தாரு.. அவங்க எல்லாம் வேற யார் கூடயாவது நடிச்சா அவ்வளவுதான்.. மனம் திறந்த சிங்கமுத்து..!

By Mahalakshmi on ஜூலை 5, 2024

Spread the love

நடிகர் வடிவேலு குறித்து சமீபத்திய பேட்டியில் காமெடி நடிகர் சிங்கமுத்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார். அதை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வளம் வந்தவர் வடிவேலு. 90களில் அறிமுகமான இவர் 90களில் தொடங்கி தற்போது இருக்கும் 2k கிட்ஸ் வரை பிரபலமாக இருக்கின்றார். சோசியல் மீடியாவில் இவரை வைத்து தான் பல மீம்ஸ் ஓடிக்கொண்டிருக்கின்றது. சில பிரச்சனை காரணமாக 10 வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கின்றார்.

   

   

இருந்தாலும் அனைத்து வீடுகளிலும் தனது திரைப்படத்தின் மூலமாக பிரபலமாகி கொண்டு தான் இருக்கின்றார் வடிவேலு. 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மேடை ஏறிய வடிவேலு விஜயகாந்த் மிகத் தாக்கி பேசியிருந்தார். ஆனால் அந்த தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணி தான் வென்றது. இனியும் வடிவேலுவை வைத்து படம் எடுத்தால் ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளாகி விடுவோம் என்ற அஞ்சிய திரைத்துறையினர் வடிவேலுவை வைத்து படமே இயக்கவில்லை.

 

அதுமட்டுமில்லாமல் அவரின் சில தனிப்பட்ட நடவடிக்கைகளாலும், திரைத்துறையில் இருந்து காணாமல் போனார். பல வருடங்களுக்குப் பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தின் மூலமாக நடிக்க வந்தார். அந்த திரைப்படமும் சரியாக போகவில்லை. ஆனால் உதயநிதி ஸ்டாலின் உடன் நடித்த மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இந்நிலையில் வடிவேலுவுடன் பல படங்களில் சேர்ந்து நடித்த சிங்கமுத்து அவரை குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியிருந்தார்.

அதில் அவர் கூறியதாவது “நடிகர் வடிவேலுவுக்கு என்று ஒரு Gang இருந்தது. அந்த Gang -கை மட்டும்தான். தனது படத்தில் நடிப்பதற்கு பரிந்துரைபார். அதை தாண்டி புதிதாக ஏதாவது ஒரு நடிகர் வந்தால் போதும். அவரை எப்படியாவது சினிமாவை விட்டு துரத்தி விட வேண்டும் என்று நினைக்கக் கூடியவர். அது மட்டும் இல்லாமல் அந்த Gang -கில் இருந்து யாராவது ஒருவர் மற்ற நடிகர்களுடன் சேர்ந்து நடித்து விட்டால் போதும் உடனே Gang-கை விட்டு ஒதுக்கி விடுவார்.

நான் அவருடன் இருந்தபோது சந்தானம் திரைப்படத்தில் நடிக்க தொடங்கினேன். உடனே என் மீது கோபம் வந்துவிட்டது. அவர் என்னை அழைத்து இப்படியெல்லாம் பண்ணக்கூடாது என்று கூறினார். மேலும் நீ நம்முடைய ட்ரெண்டிங்கை அவரிடம் பகிர்ந்து விடுவாய் என்று சொன்னார். எனக்கு சிரிப்பு தான் வந்தது என்ன ட்ரெண்டிங் பெரிய ட்ரெண்டிங் சந்தானம்தான் அப்போது சினிமாவில் காமெடிகளில் மிக ட்ரெண்டாக இருந்தவர்” என்று பேசியிருந்தார்.