ராமராஜன் பட நடிகையா இது..? 54 வயதிலும் கவர்ச்சியில் காட்டும் தாராளம்.. வைரலாகும் போட்டோஸ்..!

By Mahalakshmi on ஜூலை 5, 2024

Spread the love

ராமராஜன் படத்தில் நடித்த பிரபலமான நடிகை சாந்திப்பிரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தின் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கடந்த 1987 ஆம் ஆண்டு இயக்குனர் கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த எங்க ஊரு பாட்டுக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சாந்தி பிரியா. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் தமிழில் தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கினார்.

   

   

அந்த திரைப்படத்தை தொடர்ந்து எங்கள் ஜாதியே, பூவிழி ராஜா, தாய் நாட்டு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வந்தார். மேலும் தமிழ் சினிமாவில் விஜயகாந்த், சத்யராஜ், ராமராஜன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்திருக்கின்றார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வந்த இவர் டாப் நடிகையாக வலம் வந்தார்.

 

அது மட்டுமில்லாமல் இவர் 80’ஸ்களில் கொடி கட்டி பறந்த நடிகை பானுப்ரியாவின் சகோதரி ஆவார். இவர் கடைசியாக 1994 ஆம் ஆண்டு இந்தி திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்னர் சினிமாவிலிருந்து விலகிய இவர் பல ஆண்டுகளாக எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார். மீண்டும் வெற்றிமாறன் படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்கப் போவதாக தகவல் வெளியாகி வந்தது.

தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர் முற்றிலும் ஹிந்தியில் பல படங்களில் நடித்து வந்தார். தற்போது வெப் சீரிஸ்களில் நடித்து வருகின்றார். சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் 54 வயதான போதிலும் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அந்த நடிகையா இது என்று கேட்டு வருகிறார்கள்.