தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் வெங்கடேஷ் தன்னைவிட 30 வயதுக்கு குறைவான நடிகைகளுடன் நடிக்க இருப்பது குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் வெங்கடேஷ். இவர் பிரபல இயக்குனரான அணில் ரவிபுடி கூட்டணியில் புதிய திரைப்படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கின்றார். ஏற்கனவே இந்த இயக்குனருடன் சேர்ந்து இரண்டு படங்களில் நடித்து முடித்து இருந்த நிலையில். மூன்றாவதாக SVC 58 என்ற பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் நடிக்க இருக்கின்றார் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
இந்த படத்தில் நடிகர் வெங்கடேஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மீனாட்சி சவுத்ரி என்று இரண்டு நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தில் நடிகர் வெங்கடேஷன் காதலியாக மீனாட்சி சவுத்ரியும், மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருக்கின்றார். தற்போது வெங்கடேஷுக்கு 63 வயதாகின்றது. இவருடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ் க்கு தற்போது 34 வயதாகின்றது.
மேலும் மீனாட்சி சவுத்ரிக்கு 27 வயதாகின்றது. இவர்கள் இருவருக்கும் வெங்கடேஷை விட 30 வயது குறைவு. இந்த வயது வித்தியாசத்தில் நடிகைகளுடன் ஜோடி சேர்வது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. ஏற்கனவே நடிகர் பாலையா சுருதிஹாசன் மற்றும் ஹனிரோஸ் என்ற இரண்டு இளம் நடிகையுடன் ஜோடி சேர்ந்தது தொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்தது. ஆனாலும் வீரசிம்ஹா ரெட்டி திரைப்படம் நல்ல வரவேற்பை தான் கொடுத்திருந்தது.
அதே போல தான் நடிகர் நாகார்ஜுனாவும் நா சமிரங்கா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் நடித்த நடிகைக்கு 27 வயது தான். அந்தப் படத்தில் நாகார்ஜுனாவுக்கும் நடிகை ஆஷிகா ரங்காவுக்குமே 30 வயது வித்தியாசம் இருந்தது. இப்படி தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகர்கள் இளம் நடிகைகளுடன் ஜோடி போட்டு தான் நடித்து வருகிறார்கள். அதை தொடர்ந்து இந்த சர்ச்சையில் தற்போது நடிகர் வெங்கடேஷும் இணைந்து இருக்கின்றார்.