ஹீரோக்கள் போல வளர்ந்துள்ள சிம்ரனின் மகன்கள்…!!! வருங்கால ஹீரோக்கள் ரெடி…!!!

By Begam on புரட்டாதி 5, 2022

Spread the love

‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார்   நடிகை சிம்ரன். 90 களில் தமிழ் திரைப்படங்களில் அதிக சம்பளம் வாங்கிய நடிகைகளில் ஒருவர் . கோவில்பட்டி வீரலட்சுமி, துள்ளாத மனமும் துள்ளும் படங்கள் இவருக்கு பல விருதுகளை வாங்கி தந்தன .

   

தனது சிறு வயது நண்பரான  தீபக் பாகாவை திருமணம் செய்து கொண்டார். நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், வாலி,  அவள் வருவாளா, பிரியமானவளே, உன்னைக் கொடு என்னைத் தருவேன், பார்த்தேன் ரசித்தேன், பஞ்சதந்திரம், கன்னத்தில் முத்தமிட்டால் ,வாரணம் ஆயிரம் ,உதயா இவர் நடிப்பில் வெளி வந்த ஹிட் திரைப்படங்கள்.

   

 

90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே  உருவாக்கினார் . திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருந்த இவர் தற்பொழுது மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார்.

இந்நிலையில் அவர் தனது இரண்டு மகன்களுடன்  இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது