சீரியல் நடிகை மகாலட்சுமி ஹனிமூன் புகைப்படங்கள்…!!! எங்க உங்க கணவரையே காணோம்…!!! கலாய்க்கும் நெட்டிசன்கள்…!!!

By Begam on புரட்டாதி 5, 2022

Spread the love

சீரியல் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை காதலித்து பெற்றோர் சம்பந்தப்பட்ட சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். சன் மியூசிக் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், சன் டிவியில் ஒளிபரப்பான ‘அரசி’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில்  கால்பதித்தார் .

   

யாமிருக்க பயமேன், செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில்  நடித்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘தேவதையை கண்டேன்’ சீரியல் மூலம் இவர் பிரபலமானார். திருப்பதியில் நடைபெற்ற இவர்கள் திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் திரைத்துறையினர் கலந்து கொண்டு இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

   

இந்த காதல் தம்பதி தற்பொழுது திருமணம் முடிந்த நிலையில் ஹனிமூன் கொண்டாடி வருகிறார்கள் . ஹனிமூனுக்காக  இவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லாமல் சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கி உள்ளார்கள் . அந்த ரெசார்ட்டில் இருந்தவாறு மகாலட்சுமி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

 

அந்த புகைப்படத்தில் மகாலட்சுமி தனியாக இருப்பதனால் எங்க  உங்க கணவரையே காணோம்? என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஹனிமூனுக்கு சென்ற அவர் கணவருடன் இல்லாமல்  தனியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது ஏன் என்று  ரசிகர்கள் கேள்வி எழுப்பி  வருகின்றனர்.