விஷாலின் உழைப்பில் மொத்தமாக மண்ணை வாரிபோட்ட விஜய்.. மண்டைய பிச்சிக்கிட்டு அலையும் புரட்சி தளபதி..

By Begam on சித்திரை 26, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் தற்போது ரத்னம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்து வருகிறார். தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு மூன்றாவது முறையாக விஷால், ஹரி கூட்டணி இணைந்துள்ளது.

#image_title

#image_title#image_title

   
   

இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, யோகிபாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் இன்று ரிலீஸாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு படம் வசூல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் நடிகர் விஜயின் கில்லி திரைப்படம் ரீ ரிலீசாகி பெரிய பெரிய தியேட்டர்களை ஆக்கிரமித்து உள்ளது தானாம். எனவே நடிகர் விஷாலின் ரத்னம் திரைப்படத்திற்கு சின்ன சின்ன தியேட்டர்கள் தான் ஒரு சில இடங்களில் கிடைத்ததாம்.

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் விஷாலின் பெரும் நம்பிக்கையில் வெளியான இத்திரைப்படம் அவ்வளவாக இன்று வசூலிலும் சரி, ரசிகர்களின் விமர்சனத்திலும் சரி மந்த நிலையிலேயே காணப்படுகிறது. இனி வரும் நாட்களிலாவது ரத்னம் திரைப்படம் வசூல் வேட்டை நடத்துமா..? பொறுத்திருந்து பார்ப்போம்.