இந்த புகைப்படத்திலுருக்கும் சிறுவயது பிரபலம் யார் தெரியுமா…? உங்களால கண்டுபுடிக்கவே முடியாது…

By Begam

Published on:

90ஸ் காலகட்டத்தில் காலகட்டத்தில் இருந்தே ஆங்கரிங் செய்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுப்பாளினி அர்ச்சனா. இவர் சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான ‘காமெடி டைம்’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார். அந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபுவுடன் இணைந்து தொகுப்பாளர் பணியை தொடங்கினார்.

   

இதை தொடர்ந்து சொர்ணமால்யா விட்டுச் சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றார். இவர் 2004ல் வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் தொலைக்காட்சியில் இருந்து விலகி இருந்தார் அர்ச்சனா. இவருக்கு சாரா என்ற ஒரு மகள் உள்ளார்.

பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரிகம’ ரியாலிட்டி ஷோவில் தொகுபாளினியாக களம் இறங்கினார். தற்பொழுது அர்ச்சனாவும் அவரது மகளும் சாராவும் இணைந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சூப்பர்மாம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதேபோல கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்திலும் அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இருவரும் நடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் அர்ச்சனாவின் மகள் தனது சிறுவயதிலேயே தொகுப்பாளினியாக களமிறங்கியுள்ளார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்ககூடியவர் அர்ச்சனா. தற்பொழுது இவர் தனது சிறுவயது புகைப்படங்களை வீடியோவாக இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…