‘வேட்டை மன்னன் எதனால் ட்ராப் ஆனது?… அப்பவே நான் சிவகார்த்திகேயனுக்கு பண்ண அட்வைஸ்’ – சிம்பு ஒபன் டாக்!

By vinoth on செப்டம்பர் 14, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் இருக்கும் திறமை மிகு நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். தன்னுடைய ஒரு வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் அவரிடம் இருக்கும் சில பிரச்சனைகள் காரணமாக அவர் தொடர்ச்சியாக படங்களில் நடிக்காமல் சிக்கல்களை உருவாக்கிக் கொள்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்புவின் மீது பல புகார்கள் எழுந்தன. அவர் சரியாக படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார் எனவும் டப்பிங்கிற்கு கூட வர மறுக்கிறார் எனவும் தயாரிப்பாளர்கள் கூறி வந்தனர். குறிப்பாக அவரை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தைத் தயாரித்த மைக்கேல் ராயப்பன் சிம்புவின் குற்றச்சாட்டு வைத்து  அவருக்கு ரெட் கார்ட் போடும் அளவுக்கு சென்றது. இன்னும் அந்த பிரச்சனை ஓய்ந்த பாடில்லை.

   

அதே போல சிம்பு ஒரு படத்தை ஆர்வமாக ஆரம்பிப்பார். ஆனால் பாதி ஷூட்டிங் முடிந்ததும் படம் அவருக்கு திருப்தியாக இல்லை என்று நிறுத்தி விடுவார். இப்படி பல படங்கள் அவர் நடிப்பில் தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன, அப்படிப்பட்ட ஒருபடம்தான் வேட்டை மன்னன்.

   

தற்போது முன்னணி இயக்குனராக இருக்கும் நெல்சன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் அது. அந்த படத்தின் பாதி காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டது. அதனால் நெல்சன் பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் இயக்குனராக ’கோலமாவு கோகிலா’ மூலம் அறிமுகமாகி தற்போதைய இடத்துக்கு வந்துள்ளார்.

 

இந்நிலையில் வேட்டை மன்னன் படம் கைவிடப்பட்டது ஏன் என சிம்பு ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் மனம் விட்டுப் பேசியுள்ளார். அதில் “வேட்டை மன்னன் திரைப்படத்துக்கு பொருளாதாரப் பிரச்சனைகள் வந்த போது அந்த படத்தை தொடர்ந்து எடுப்பதற்காகதான் ‘வாலு’ படத்தில் நடித்தேன். கடைசியில் அந்த படமே பெரிய பிரச்சனையில் சிக்கி கடைசியில் வேட்டை மன்னன் படத்தைக் கைவிட வேண்டியதாகி விட்டது.

அந்த படத்தின் பாதிக் காட்சிகளை படமாக்கிவிட்டோம். அந்த படத்தில் சிவகார்த்திகேயன் உதவி இயக்குனராகவும், ஒரு சிறு வேடத்திலும் நடித்தார். அப்போதே அவரை கணித்த நான் ‘இவருக்கு இந்த சின்ன வேடத்தைக் கொடுத்திருக்க வேண்டாம். அவருக்கு பெரிய திறமைகள் இருக்கு. பெரிய ஆளா வருவார் என நான் இயக்குனரிடம் சொன்னேன்” எனக் கூறியுள்ளார்.