காமெடி நடிகர் கருணாகரனின் வீட்டில் திடீரென ஏற்பட்ட இழப்பு.. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!

By Nanthini on செப்டம்பர் 14, 2024

Spread the love

தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க காமெடி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் கருணாகரன். இவர் பல துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய புகழை சினிமாவில் தேடித் தந்த திரைப்படம் என்றால் அது சூது கவ்வும் திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் நடிகர் கருணாகரன் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பாராட்டப்பட்டது.

   

இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து இவர் அடுத்ததாக யாமிருக்க பயமே, ஜிகர்தண்டா, நண்பேண்டா, ஹலோ நான் பேய் பேசுறேன், ஒரு நாள் கூத்து என அடுத்தடுத்து பல வெற்றி திரைப்படங்களின் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தமிழ் சினிமாவில் சினிமாவிற்கு வந்த குறைந்த காலத்திலேயே சுமார் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்து விட்டார்.

   

 

இந்த நிலையில் நடிகர் கருணாகரனின் தந்தையும் கேபினட் செயலக சிறப்பு பிரிவின் ஓய்வு பெற்ற அதிகாரியுமான காளிதாஸ் உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். இவருக்கு 77 வயது. தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்து 37 ஆண்டுகளில் சேவையாற்றிய என் தந்தை என்று உயிரிழந்தார் என்று கூறி கருணாகரன் இன்று மாலை 3 மணி அளவில் பெசன்ட் நகரில் இறுதி சடங்கு நடைபெறும் என சோகத்துடன் பதிவிட்டுள்ளார். இவருடைய மறைவுக்கு சிறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

author avatar
Nanthini