தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர்தான் சில்க் ஸ்மிதா. ஆந்திராவில் பிறந்து வளர்ந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாள மற்றும் கன்னடம் என பல மொழிகளில் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை அபர்ணாவிற்கு டச் அப் ஆர்டிஸ்ட் ஆக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய சில்க் ஸ்மிதாவிற்கு இணைய தேதி என்ற மலையாளப் படம் தான் சினிமா வாய்ப்பு கொடுத்தது. ஆனால் அதற்கு முன்னதாக தமிழ் சினிமாவில் வினு சக்கரவர்த்தி தான் சில்க் ஸ்மிதாவிற்கு நல்ல ஒரு அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் கொடுத்தார்.

வண்டிச்சக்கரம் படத்தில் நடிக்க வைத்து இவரை பிரபலமாக்கினார். அதன் பிறகு அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கிய நிலையில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனாலும் பெரிய அளவிற்கு அவரது கதாபாத்திரம் பேசவில்லை. அவர் ஒரு டான்சர் இல்லை என்றாலும் இவருக்கு ஐட்டம் டான்ஸ் கை கொடுக்க ஆரம்பித்தது. அப்படி தான் வண்டி சக்கரம் படத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். 80 காலகட்டத்தில் கனவு கன்னியாக வலம் வந்தார். தூண்டில் போட்டு இழுக்கும் அவரது கண்களுக்கு பல ரசிகர்கள் மயங்கினார்கள். அவ்வளவு சக்தி அவரின் கண்களுக்கு இருந்தது. மலையாள மற்றும் தமிழ் ஹீரோக்கள் தங்களின் படங்களில் சில்க் ஸ்மிதாவின் பாடல்கள் தங்களுடைய படங்களில் இடம்பெற வேண்டும் என்று விரும்பினார்கள்.

ஒரே ஒரு ஐட்டம் டான்ஸ் ஆடுவதற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெற்று வந்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் ஐந்து கோடிக்கு நிகர் என்று கூறப்படுகிறது. அதாவது ஹீரோயினியை விட அதிகமாக ஐந்து நிமிட பாடலுக்கு சில்க் ஸ்மிதா சம்பளம் பெற்று வந்துள்ளார். ஒரு கட்டத்தில் மது பழக்கத்திற்கு அடிமையாகி பல சர்ச்சைகளில் சிக்கிய சில்க் ஸ்மிதா மன அழுத்தத்தில் தனது 35 வயதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
