விஜய் டிவியில் மகாநதி சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியல் மக்களின் ஃபேவரைட் சீரியலாக இருக்கிறது. ஆரம்பத்தில் நான்கு அக்கா தங்கைகளின் வாழ்க்கையை கொண்டு இந்த சீரியல் நகர்த்தப்பட்டு வந்தது. தற்போது விஜய்- காவேரி கதையாக மாறிவிட்டது. விஜய் காவேரியும் எந்த பிரச்சினையும் இல்லாமல் எப்போது இணைவார்கள்? என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் விஜய் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு தனியாக இருக்கிறார். அவரை பார்த்துக்கொள்வதற்கு காவேரி விஜய் இருக்கும் இடத்திற்கே வந்துவிட்டார்.
இந்த நிலையில் தான் இந்த சீரியலில் யமுனா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆதிரை தொடரிலிருந்து விலகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அயனார் துணை சீரியல் ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்பானது. தற்போது இந்த வாரம் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் தொடராக உள்ள மகாநதி சீரியல் ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்பப்பட உள்ளது.
