ஜாக்கிரதை..! “சூழ்ச்சி சில நேரங்களில் அன்பாக தெரியும்” ஆர்த்தி போட்ட எச்சரிக்கை பதிவு… ஓஹோ அதுக்காக தானோ..!!

By Soundarya on ஆடி 1, 2025

Spread the love

நடிகர் ரவி மோகன் தன்னுடைய மனைவி விட்டு பிரிந்து வந்த பிறகு சினிமாவில் படு பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கிறார். தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அதேபோல கராத்தே பாபு, ஜூனி போன்ற படங்களையும் தன் கைவசம் வைத்திருக்கிறார். மேலும்  இயக்குனராகவும் அவதாரம் எடுக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.  தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய விண்ணப்பித்திருக்கும் இவர் தற்போது தன்னுடைய மனைவி மற்றும் மகன்களை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இதற்கிடையில் தன்னுடைய மூத்த மகன் பிறந்தநாளை ஒட்டி மகன்களை சந்தித்து உள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வந்தது. இதற்கிடையில் ஆர்த்தி வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில், “ஜாக்கிரதை சூழ்ச்சி கூட சில நேரங்களில் அன்பு போல தோன்றலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் ரவி மோகன் தன்னுடைய இரண்டு மகன்களை சந்தித்தது பேசியது குறித்து தான் ஆர்த்தி இப்படி பதிவிட்டுள்ளதாக பேசப்படுகிறது.