‘என் கால் மேல நான் கால் போட்டிருக்கேன், இதுல என்ன பிரச்சனை’.. சில்க் சொன்ன லாஜிக்.. புரியவைத்த புலியூர் சரோஜா..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் கதாநாயக, கதாநாயகிகளுக்கு என்று ஒரு ரசிகப் பெரும்கூட்டம் இருப்பது கவர்ச்சி நடிகைகளுக்கும் ரசிகர் கூட்டம் உள்ளது. அந்த வரிசையில் முக்கிய இடம் பிடித்தவர் சில்க் ஸ்மிதா. அவர் தான் நடித்த பெரும்பாலான படங்களில் கவர்ச்சி வேடங்களையே தேடி தேடி நடித்தார் என்றாலும், அவரிடம் ஒரு தனித்துவம் இருந்தது. இதனால் தென்னிந்தியா முழுவதும் அவருக்கு படங்களுக்கு வரவேற்பு இருந்தது.

ஆனாலும் அவர் தன்னுடைய 35 ஆவது வயதில் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இன்றுவரையும் அவரின் மரணத்துக்கான காரணம் மிகவும் மர்மமாகவே உள்ளது. அப்படி இந்த மண்ணுலகை விட்டு பிரிந்து 27 ஆண்டுகள் ஆன பிறகும் ஒரு நடிகை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார் என்றால் அது நடிகை சில்க் ஸ்மிதா மட்டும்தான்.  சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரின் வாழ்க்கையை தழுவி தி டர்ட்டி பிக்சர் எனும் திரைப்படம் இந்தியில் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது.

   

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பணியாற்றினாலும் அவருக்கு அந்த துறையில் பெரியளவுக்கு நண்பர்கள் கிடையாது. யாருடனும் சிரித்துப் பேசமாட்டார். அனைவரையும் அவமானப்படுத்துவது போல பதிலளிப்பார் என அவர் மீது நிறையக் குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால் அவருக்கு திரையுலகில் மிகவும் நெருக்கமான தோழியாக இருந்தவர் புலியூர் சரோஜா அவர்கள்தான்.

சில்க் ஸ்மிதா கவர்ச்சி நடனம் ஆடிய பல பாடல்களுக்கு நடனம் சொல்லிக் கொடுத்தவர் புலியூர் சரோஜாதான். தன்னிடம் சில்க் மனம் விட்டு பேசுவார் என்றும் யார் சொன்னாலும் கேட்காதவள் நான் சொன்னால் மட்டும் கேட்டுகொள்வார் என்றும் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தையும் பகிர்ந்துள்ளார். சூரக்கோட்டை சிங்கக்குட்டி படத்தின் ஷூட்டிங்கின் போது நம்பியாருக்கு எதிரில் அமர்ந்திருந்த சில்க் கால் மேல் கால் போட்டபடி உட்கார்ந்திருக்கிறார். அதைப் பார்த்த சரோஜா அப்படி உட்காரக் கூடாது என சொல்லவே “என் கால் மேல கால் போட்டு நான் உக்காந்திருக்கேன். அவர் கால் மேலயா கால் போட்டிருக்கேன். ” எனக் கேட்டுள்ளார். அதன் பிறகு சரோஜா “அவர் ஒரு சீனியர் நடிகர். அவர் முன்னால நாம இப்படி உட்காரக் கூடாது” என எடுத்து சொன்னதும் அதைக் கேட்டுக்கொண்டாராம்.