கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர்கள் தான் பாவனி மற்றும் அமீர். சீசன் 6 பிக் பாஸில் மூலமாக தமிழ் மக்களுக்கு மிக பரிச்சயமாக இவர்கள் வலம் வந்தார்கள். இந்த நிகழ்ச்சி மூலமாக தான் இவர்கள் தமிழ் சினிமாவிலும் முதல் முறையாக அறிமுகமானார்கள். பிக் பாஸில் கலந்துகொண்ட ஆரம்ப கட்டத்தில் இருவருக்கும் காதல் என்று பல கிசுகிசுக்கள் வெளிவந்து கொண்டிருந்தது, இவர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நடந்து கொள்ளும் விதமும் அப்படி இருந்தாலும்,
இவர்கள் எதுவும் காட்டிக் கொள்ளாமல் தற்போது நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின், இருவரும் காதலிப்பதாக அறிவித்திருந்தார்கள். இதனை தொடர்ந்து ரசிகர்கள் இவர்களின் கல்யாணம் எப்பொழுது என்று கேட்டு வந்த நிலையில், அவர்கள் அதற்கான விஷயத்தை வெளிப்படுத்தாமலே இருந்தார்கள்.
அந்த நேரத்தில் பல கலை நிகழ்ச்சிகளும், அமீர் மற்றும் பாவணி அவர்கள் டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும் மற்றும் டான்ஸ் கிளாஸ் வெச்சு நடத்துவதும் என்று கரியர் வாழ்க்கையில் மிக பிஸியாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். தற்போது கடந்தாண்டு எஸ் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு படத்தில் கூட இவர்கள் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார்கள்.
அதன் பின்னதாக சிறு சிறு படங்கள் கமிட் ஆகி நடித்து வந்த நிலையில், தற்போது இவர்கள் இருவரும் பெரிதாக எந்த அறிவிப்பில்லாமல் இருவீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தத்தை முடித்து திருமணம் தேதி அறிவித்துள்ளார்கள். தற்போது அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டிருந்த அமீர் மட்டும் பாவனிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவர்களின் ரசிகர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்து வந்த விஷயம் நடைபெற்றதால் பலரும் மகிழ்ச்சியில் இவர்களுக்கு வாழ்த்தும் வரவேற்பும் கொடுத்து வருகிறார்கள்.