Categories: சினிமா

அல்லு அர்ஜுனோடு எனக்கு பிரச்சினையா..? புஷ்பா-2 விமர்சனம் குறித்து ஓபனாக பேசிய சித்தார்த்..!

Spread the love

புஷ்பா திரைப்படம் மூலமாக பான் இந்திய நடிகராக உருவெடுத்துள்ளவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் நடித்த புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. சுகுமார் இயக்கிய இந்த திரைப்படத்தில் செம்மர கடத்தல் காரராக அல்லு அர்ஜுன் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாகவும் வில்லனாக பகத் பாசிலும் நடித்து அசத்தியுள்ளனர். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.

இந்த படம் பக்கா கமர்சியல் படமாக இருந்தாலும் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 2 திரைப்படம் 10 நாட்களில் ஆயிரம் கோடி வசூல் செய்த இந்திய சினிமாவை அதிர வைத்தது. அதனைப் போலவே கே ஜி எஃப் 2, RRR, கல்கி 2898 ஏடி உள்ளிட்ட படங்கள் 16 நாட்களில் ஆயிரம் கோடி வசூல் சாதனை செய்தன. ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் மற்றும் பதான் ஆகிய திரைப்படங்களும் ஆயிரம் கோடி வசூலை ஈட்டியது.

ஆனால் அதிரடியாக அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் 6 நாட்களில் ஆயிரம் கோடி வசூல் சாதனை படைத்திருப்பது ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரை துறையினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டார்கள்.  இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சித்தார்த், புஷ்பா 2 விற்கு கூட்டம் கூடுவது எல்லாம் பெரிய விஷயம் இல்லை. இந்தியாவில் கூட்டத்திற்கும் குவாலிட்டிக்கும் சம்மந்தமில்லை.

#image_title

3 ஜேசிபி  வந்தா கூட தான் கூட்டம் கூடும் என்று கூறியிருந்தார். இதனையடுத்து ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மிஸ் யூ பட புரொமோஷன் நிகழ்ச்சியில் சித்தார்த்திடம் அல்லு அர்ஜூனுக்கும், உங்களுக்கும் பிரச்சனையா என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு யாருக்கும் யார் மேலேயும் எந் பிரச்சினையும் இல்ல. புஷ்பா 2 மிகப்பெரிய வெற்றி படம் என்று கூறியுள்ளார்.

 

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

10 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

11 மணத்தியாலங்கள் ago