237 கோடி ரூபாய் ஏலத்திற்கு போன உலகின் முதல் காலனி… சாதாரண செருப்பு இல்லங்க இதற்கு பின்னால் வரலாறே இருக்கு…

Spread the love

உலகில் எத்தனையோ அரிய வகை பொருட்கள் இருக்கின்றன. அதேபோல் ஏலமும் நடப்பதை நாம் பார்த்திருப்போம். அரிய வகை பொருட்கள் எல்லாம் ஏலத்திற்கு வரும். பழங்காலத்து பொருட்கள் எல்லாம் அதிக விலையில் ஏலம் போகும். ஆனால் ஒரு ஜோடி செருப்பு அதிகபட்சமாக 237 கோடிக்கு ஏலம் போய் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதில் என்ன சிறப்பு இருக்கிறது? அதன் விவரங்கள் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

இந்த காலணி அமெரிக்காவில் தான் ரூபாய் 237 கோடிக்கு ஏலம் போய் இருக்கிறது. 1939 ஆம் ஆண்டு வெளியான புகழ் பெற்ற ஹாலிவுட் திரைப்படமான The Wizard of Oz படத்தில் நடித்த நடிகை ஜூலி கார்லண்ட் அணிந்திருந்த ஒரு ஜோடி ரூபி சிவப்பு காலணிகள் தான் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போயிருக்கிறது. 1939 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட நான்கு ஜோடி காலனிகள் மட்டுமே எஞ்சி இருந்தது. அதில் ஒரு ஜோடி தான் புகழ்பெற்ற ஹீல்ஸ் காலனிகள். இந்த காலணிக்கு பின்னால் ஒரு பெரிய கதையே இருக்கிறது.

இதற்கு முன்பு இந்த காலணிகள் மினசோட்டா அருங்காட்சியத்திலிருந்து திருடப்பட்டு இருந்தது. ஏலம் விடப்பட்ட இந்த காலணிகள் பழமையான பொருட்களை சேகரிப்பவரான மைக்கேல் ஸ்டார் 2005 ஆம் ஆண்டில் மினசோட்டாவின் அருங்காட்சியகத்திற்கு கடனாக வழங்கியிருந்தார். அருங்காட்சியத்தில் இருந்த கண்ணாடியை உடைத்து இந்த காலணியை திருடி இருக்கிறார் ஒரு நபர்.

ஆனால் இந்த காலணிகளின் காப்பீட்டு மதிப்பு ஒரு மில்லியன் அளவில் என்பதால் இந்த காலணிகளில் உண்மையான மாணிக்க கற்கள் தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் அந்த நபர் திருடிவிட்டார். ஆனால் அவர் காலணியை விற்க இடை தரகரின் கடைக்கு கொண்டு சென்ற போது அது மாணிக்க கற்கள் அல்ல வெறும் கண்ணாடியால் செய்யப்பட்டது என்பது தெரிய வந்தது. அதனால் அவர் வேறு ஒருவரிடம் அந்த காலணியை கொடுத்துவிட்டார். பிறகு கைமாறி கைமாறி 2018 ஆம் ஆண்டில் எஸ்பிஐ முகமை காலணிகளை மீட்டது. இடைப்பட்ட 13 ஆண்டுகளில் அக்காலணிகள் எங்கு இருந்தன என்பதை யாருக்கும் தெரியவில்லை.

2023 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் காலணிகளை திருடிய நபர் உண்மையை ஒப்புக்கொண்டார். அதற்குப் பிறகு வரலாற்று சிறப்புமிக்க இந்த காலணியை ஏலம் விட வேண்டும் என்று முடிவெடுத்தனர். இதுவரை ஏகப்பட்ட திரைப்படம் சம்பந்தமான பழங்கால பொருட்கள் அதிக விலைக்கு ஏலம் போனதில் இந்த காலணிகள் தான். அந்த The Wizard Of Oz நடிகை அந்த காலணி அணிந்திருந்ததால் அதன் வரலாற்று சிறப்பு காரணமாக இத்தனை கோடிக்கு இது ஏலம் போய் இருக்கிறது.

admin

Recent Posts

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு விழுந்த திடீர் முட்டுக்கட்டை…. 2028-க்குப் பிறகே தேர்தல்?…. வெளியான பரபரப்புத் தகவல்….!

தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உள்ளாட்சித் தேர்தலைத் தற்போதைக்கு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு…

4 minutes ago

“கட்சியை மறந்துவிட்டாரா முதல்வர் விஜய்?”…. வெடித்துக் கிளம்பும் தவெக உட்கட்சிப் பூசல்…. ஆட்டம்காணும் ஆட்சி….!

தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆட்சி நிர்வாகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதால் கட்சிப் பணிகளில் இருந்து விஜய் சற்று…

9 minutes ago

14 வயது சிறுவனுடன் 19 வயது இளம்பெண் தனிமையில்… நேரில் பார்த்த 10-ம் வகுப்பு மாணவன்…. அடுத்த நொடியே காத்திருந்த பேரதிர்ச்சி…. தெலுங்கானாவில் பகீர் சம்பவம்….!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…

1 மணத்தியாலம் ago

“இன்று வெளியே வருவாரா அன்பில் மகேஸ்?”…. ஐகோர்ட்டில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்…. பரபரப்பில் அறிவாலயம்….!

லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…

1 மணத்தியாலம் ago

தீபாவளி முடிந்த கையோடு போலீஸ் அதிரடி…. தமிழகம் முழுவதும் 1,000+ ரவுடிகள் கூண்டோடு கைது…. காலையிலேயே பரபரப்பு….!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…

1 மணத்தியாலம் ago

பனையூரில் அதிரடி…. அமைச்சர்கள் முதல் MLA-க்கள் வரை கையெழுத்து வாங்கிய தவெக தலைமை…. முதல்வர் விஜய் போட்ட உத்தரவு….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…

1 மணத்தியாலம் ago