WHO இன் எச்சரிக்கை… வேகமாக பரவும் கண்ணில் ரத்தம் சொட்ட வைக்கும் Bleeding Eye Virus… தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன…?

Spread the love

இன்றைய உலகத்தில் புதுசு புதுசாக பலவித நோய்கள் வந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் மனித உயிர் இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சிறிய வயது முதல் பெரியோர்கள் வரை அனைவரையும் தாக்கும் பலவித நோய்கள் உலகில் நிலவிக் கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒன்றுதான் Bleeding Eye Virus எனப்படும் கண்ணை பாதிக்கக்கூடிய ஒரு வைரஸ். இந்த வைரஸ் பாதித்துவிட்டால் கண் ரத்த சிவப்பாகி ரத்தம் வெளியேறும் அளவுக்கு இருக்கும். உலக சுகாதார அமைப்பு இது ஒரு தீவிரமான நோய் இது பரவிக் கொண்டிருக்கிறது என்று எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இதைப் பற்றியா முழு விவரங்கள் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

மார்பர்க் வைரஸ் என்பதுதான் Bleeding Eye வைரஸ் என்று கூறப்படுகிறது. இது ஒரு தொற்று நோய்க் கிருமி ஆகும். இந்த வைரசினால் பாதிக்கப்பட்டு ருவான்டாவில் 15 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். அதனால் இதை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு மற்ற நாடுகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறது. இந்த வைரஸ் தாக்கிவிட்டால் கடுமையான கண்களில் ரத்தக் கசிவு மற்றும் காய்ச்சலை உண்டு பண்ணுகிறது. ஒரு உயிருக்கு ஆபத்தான நோய் என்று அறிவுறுத்திருக்கிறார்கள்.

இந்த மார்பர்க் வைரஸ் ஒருவரை தாக்கி விட்டால் கொஞ்சமாக அறிகுறிகளை காட்டும். நோயாளிகளின் மூக்கு ஈறுகள் கண்களில் ரத்தப்போக்கு ஏற்பட ஆரம்பிக்கும். இதனால் தீவிர சோர்வு அடையலாம். கடுமையான ரத்தப்போக்கு ஏற்படுவதால் 8 முதல் 9 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பதற்கான அதிக வாய்ப்பு இருக்கிறதாக மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்.

இந்த மார்பரக் வைரஸ் அதாவது Bleeding Eye வைரஸ் எப்படி பரவுகிறது என்று பார்க்கப் போனால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் திரவங்களோடு நேரடி தொடர்பு மூலம் பாதிக்கப்படுகிறது. அவர்கள் உபயோகித்த ஆடை மற்ற பொருட்கள் மூலம் பரவுகிறது.

தலைவலி காய்ச்சல் கண்களில் ஈறுகளில் ரத்தப்போக்கு கசிவது போன்றது தெரிந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனென்றால் தற்போது இந்த மார்பரக் வைரஸ் நோய்க்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் எதுவும் இல்லை. தீவிர நிலையில் பராமரித்தல் ரத்தக் கசிவை குறைத்தல் போன்ற சிகிச்சைகள் தான் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நோய் இதுவரை இந்தியாவில் தாக்கவில்லை என்றாலும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு கூறி இருக்கிறது.

admin

Recent Posts

“யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்”… ஈரானுடன் டீல் போட்ட சீனா… ட்ரம்ப்பின் ட்ரூத் சோஷியல் பதிவால் அதிரும் உலக நாடுகள்…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீரிணையை சீனாவுக்காக நிரந்தரமாகத் திறப்பதாக அறிவித்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

2 minutes ago

“வாடா மோதிப்பார்க்கலாம்” மயில் vs பாம்பு.. ஜெயிக்கப்போவது யார்..? நடுரோட்டில் நடந்த பயங்கர மோதல்… வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு மயில் மற்றும் ஒரு பாம்புக்கு இடையே நடக்கும் கடுமையானப் போராட்டம்…

3 minutes ago

உஷார்!.. “பிரிட்ஜ் கம்ப்ரஸர் வெடிக்க இதுதான் காரணமா?”.. கோடை காலத்தில் நீங்கள் செய்ய வேண்டிய 3 தற்காப்பு நடவடிக்கைகள்…!!!

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வீடுகளில் பிரிட்ஜ் பயன்பாடு பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்தச் சூழலில், பிரிட்ஜை சுவரோடு ஒட்டி…

4 minutes ago

“வாட்ச் முதல் லேட்டஸ்ட் ஐபோன் வரை!” – ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களை திக்குமுக்காட வைக்கும் ‘மெகா’ பாஸ்… சீன நிறுவனத்தின் தாராள குணத்தால் கடுப்பான இந்திய நெட்டிசன்கள்…!

உலகெங்கும் ஆட்குறைப்பு மற்றும் பொருளாதார மந்தநிலை குறித்த கவலைகள் நிலவி வரும் சூழலில், சீனாவைச் சேர்ந்த மீடியாஸ்டார்ம் (Mediastorm) நிறுவனம்…

6 minutes ago

பகீர் வீடியோ..! சாலையில் சிதறிய கோழிகள்… மனிதாபிமானத்தை காற்றில் பறக்கவிட்டு வேட்டையாடிய மக்கள்… வைரல் வீடியோ.!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சாலையில் கோழிகள் ஏற்றிச் சென்ற வண்டி விபத்துக்குள்ளானதை அல்லது நின்றுகொண்டிருந்ததைச் சாதகமாக்கிக்…

7 minutes ago

“போதும் கீழே இறங்குங்க”… நேரலையில் எடப்பாடியைத் தொட்டு மோடி சொன்னது என்ன?… குமரியில் பரபரப்பு….!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக,…

9 minutes ago