#image_title
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கவுண்டமணியோடு இணைந்து வெற்றிகரமாக வலம் வந்தவர் செந்தில். அவர்கள் இருவரும் இணைந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளனர். முதலில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றெல்லாம் செந்தில் ஆசைப்படவில்லை. நாடகங்களில் கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார்.
அப்போது அவரின் வெகுளித்தனம் மற்றும் உடல்வாகு ஆகியவற்றை வைத்து சுற்றி இருப்பவர்கள் எல்லாம் காமெடியாக அவரை கேலி செய்வார்களாம். அதைப் பார்த்து பாக்யராஜ் தன்னுடைய படங்களில் அவருக்கு முக்கியமான வேடங்களைக் கொடுத்தார். தூறல் நின்னு போச்சு படத்தில் அவருக்கு முக்கிய வேடம் கொடுத்த போது நன்றி சொல்லி கண்ணீர் விட்டு அழுதாராம்.
கவுண்டமணியோடு அவர் உதயகீதம் மற்றும் வைதேகி காத்திருந்தாள் போன்ற இணைந்து நடித்த போது அந்த இணையின் மீதான கவனம் ரசிகர்கள் மேல் விழ ஆரம்பித்தது. அதன் பின்னர் கரகாட்டக்காரனில் உச்சம் தொட்டது அவர்களின் நகைச்சுவை. இருவரும் இணைந்து நடித்தாலும் சம்பளத்தைப் பொறுத்தவரை கவுண்டமணிக்குதான் அதிகமாக தயாரிப்பாளர்கள் கொடுப்பார்களாம்.
செந்தில், கவுண்டமணி அண்ணனுக்கு கொடுப்பதில் பாதியை எனக்குக் கொடுங்கள் என வாங்கிக் கொள்வாராம். ஆனாலும் தான் வாங்கிய சம்பளத்தை எல்லாம் சிறப்பாக முதலீடு செய்த சினிமா பிரபலங்களில் செந்திலும் ஒருவர். சாலிகிராமம் , வளசரவாக்கம் எல்லாம் அப்போது வளர்ந்து வரும் பகுதிகள். அங்கெல்லாம் நிலங்களை வாங்கிப் போட்டு வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டாராம்.
அதேபோல தனது மகன்கள் இருவரையும் கூட நன்றாக படிக்கவைத்துள்ளார். செந்திலின் மூத்த மகன் மருத்துவர் மணிகண்டன் பிரபு தந்தையின் ஆசை பற்றி பேசியுள்ளார். அதில் “எங்கள் பரம்பரையில் யாருமே பெரிதாகப் படிக்கவில்லை. அதனால் அப்பா நான் மருத்துவராக வேண்டும் என ஆசைப்பட்டார். அந்த ஆசையை நிறைவேற்றி நான் இப்போது ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.
ஆளுநரின் வாகனக் கடந்து செல்லும் நிகழ்விற்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பிரசவ வலியால் அவதிப்பட்ட தன் கர்ப்பிணி மனைவியுடன் கணவர் ஒருவர்…
பாஜக தலைவர்களில் ஒருவரான அண்ணாமலை, கட்சியில் இருந்து தனக்கு ஏற்பட்டுள்ள சில அரசியல் அதிருப்திகள் காரணமாக, பாஜகவிலிருந்து விலகி புதிய…
ஒடிசா மாநிலம் ஜெகத்சிங்பூரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) அலுவலகத்தில் பணியாற்றிய சஞ்சய் அடேகா என்ற இளநிலை…
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஓல்ட் ஏர்போர்ட் சாலையில், அம்மாநில ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் கடந்து செல்வதற்காக சுமார் 30…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வீதியில் 'குமர விலாஸ்' என்ற ஹோட்டலை நடத்தி வரும் ராஜசுந்தரம் - ஜெயந்தி தம்பதியினரிடம்,…
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பா.ஜ.க கட்சியிலிருந்து விலகப்போவதாகத் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்…