தனக்கு மூத்தவர்கள் இருக்கும் போதே திருமணத்தை முடித்த நடிகர், நடிகைகளின் உடன்பிறப்புகள்.. யார் யார் தெரியுமா..?

By admin on ஆடி 12, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் திருமண வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றனர். ஆனால் மூத்தவர்கள் இருக்கும் போது பிரபலங்களின் உடன்பிறப்புகள் திருமணம் செய்து கொள்கின்றனர். அப்படி திருமணம் செய்து கொண்ட நடிகர் நடிகைகளின் உடன்பிறப்புகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

சத்யா - பாவனா திருமணம்

   

முதலாவதாக நடிகர் ஆர்யாவின் சகோதரர் சத்யா புத்தகம் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் அமரகாவியம் எட்டுத்திக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆர்யாவுக்கு திருமணம் ஆவதற்கு முன்னரே சத்யா தனது காதலியான பாவனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

   

Akash murali,விஜய் மாமா மகள், அதர்வா தம்பி திருமண புகைப்படங்கள் - akash murali, sneha britto wedding pictures - Samayam Tamil

 

அடுத்ததாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு அதர்வா, ஆகாஷ் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதர்வா நடிகராக வலம் வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி அதர்வாவின் தம்பி ஆகாஷ் பிரபல தயாரிப்பாளர் சேவியர் பிட்டோ மகள் சினேகா பிரிட்டோவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Simbu Brother Kuralarasan Baby Birth: பெரியப்பா ஆனார் சிம்பு! டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசனுக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா

அடுத்ததாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் சிம்புவின் தம்பி குரளரசனுக்கு கடந்த 2019- ஆம் ஆண்டு நபீலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் குறித்த வதந்திகளுக்கு கவலைப்படாமல் தனது சினிமா கேரியரில் சிம்பு கவனம் செலுத்தி வருகிறார்.

தங்கை பூஜா நிச்சயதார்த்தம்; டான்ஸ் ஆடி அசத்திய சாய் பல்லவி; வைரல் வீடியோ

அடுத்ததாக சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 31 வயதாகும் சாய்பல்லவிக்கு திருமணம் ஆகவில்லை. இவரது தங்கை பூஜா சித்திரை செவ்வானம் என்ற படத்தில் நடித்து திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். பூஜாவுக்கும் அவரது காதலர் வினித் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் நிச்சயதார்த்தம் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது.

நடிகை ஜனனி ஐயர் தங்கை திருமண வீடியோ 💖அக்கா நீ பக்கத்துல நில்லு |Janani Iyer Sister Marriage Video🥰 - YouTube

நடிகை ஜனனி ஐயர் கடந்த 2011-ஆம் ஆண்டு விஷால் ஆர்யா நடிப்பில் ரிலீசான அவன் இவன் படத்தில் நடித்து பிரபலமானார். அதற்கு முன்பு ஒரு சில படங்களில் ஜனனி நடித்துள்ளார். தமிழ் பிக் பாஸ் சீசன் இரண்டிலும் ஜனனி ஐயர் கலந்து கொண்டார். ஜானகி இன்னும் திருமணம் ஆகவில்லை ஆனால் அவரது தங்கை கிருத்திகாவுக்கு திருமணம் நடைபெற்றது.

தங்கை திருமணத்தில் கண் கலங்கி அழுத நடிகை ஜனனி~Actress Janani Iyer getting Emotional at marriage - YouTube