அபிராமியை காப்பாற்ற புது முயற்சி எடுக்கும் தீபா.. தன் வாயாலயே சூனியம் வச்சிகிட்ட ரம்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்..!

By Mahalakshmi on ஜூலை 12, 2024

Spread the love

கார்த்திகை தீபம் எபிசோடில் இன்று என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தீபா வலுக்கட்டாயமாக ரம்யாவை பேரரில் இறக்கி ஆற்றுக்குள் உருட்டி விடுகின்றார். அதைத் தொடர்ந்து கார்த்திக் எப்படியோ அந்த பேரரில் இருந்து ரம்யாவை காப்பாற்றி விடுகிறார். இருவரும் தீபா இருக்கும் இடத்திற்கு சென்று மயங்கி இருக்கும் தீபாவை எழுப்புகிறார்கள்.

என்ன ஆச்சு என்ன நடந்தது என்று கேட்க கார்த்திக் ரம்யா பரிகாரம் செய்ததாக சொல்ல தீபா நீ எதுக்கு பரிதாபம் பண்ண என கோபப்படுகிறார். பிறகு நீ தான் என்ன பண்ண சொன்ன என்று கூறி தீபாவை நம்ப வைக்கின்றார். அதையடுத்து அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு செல்கின்றார். தீபா கோவிலுக்கு வந்து பெண் சாமியார் ஒருவரை சந்திக்கின்றார். இந்த மாதிரி பரிகாரம் செய்யப் போனேன்.

   

   

ஆனால் என்னால் பரிகாரம் செய்ய முடியவில்லை என்று சொல்ல சாமியார் நான்தான் உன்னை தடுத்தேன் என்று கூறுகிறார். அதற்கு எதுக்கு என்னை இப்படி தடுத்தீங்க என்று கேட்க உங்கள் அத்தையை காப்பாற்றும் சக்தி உன்கிட்டையே இருக்கு என்று சொல்ல தீபா குழப்பம் அடைந்து விடுகின்றார். அதே சமயம் அடியாளுக்கு போன் செய்து வரவழைத்து பானகத்தில் விஷத்தை கலந்து கொடுத்து தீபாவை குடிக்க கூறுகிறார்.

 

அவளால் பாடமுடியாவல் போய்விடும் என்று திட்டம் போடுகிறார். அதைப்போல் கலந்ததை கொடுக்க தீபாவும் குடிக்க போகும் சமயத்தில் அந்த பெண் சாமியார் தீபா எனக்கு என்று கேட்டு பானகத்தை வாங்கி அவர் குடித்து விடுகின்றார். தீபாவை பாட சொல்லி அனுப்பி விடுகின்றார். அந்த பெண் சாமியார் பாதகத்தை குடிக்க குடிக்க ரம்யாவுக்கு நெஞ்சு எரிய தொடங்கி விடுகின்றது.

அவள் பயந்து ஓடி விடுகிறார். தீபா கலைவாணியை குளிர வைப்பதற்காக பாட்டு பாடுகிறார். பாட்டு பாடி மனம் உருகி கடவுளை வேண்டிக் கொண்டிருக்கின்றார். இதை கார்த்திக் பார்த்துக் கொண்டிருக்கின்றார். இன்று இரவு 9 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கின்றது. அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். அபிராமி கண்ணை திறந்து விடுவாரா உயிர் பிழைத்து விடுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.