தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். கடைசியாக விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு லியோ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இந்த படத்தை லலித் குமார் தயாரித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. லியோ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான காட்சிகள் விஜயின் போக்கிரி படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் போலவே இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம் அனைத்து பொருட்களும் ப்ரீசாகி நிற்பது, விஜய் Gun-ஐ தூக்கிப்போட்டு பிடிப்பது, கிளைமாக்சில் திரும்பி நின்று சுடுவது, ப்ரோமோவில் முதுகு சொரிவது, துப்பாக்கியால் சுட்டு விட்டு கோபமாக பார்ப்பது, பின்னால் நிற்கும் நபரை திரும்பி பார்க்காமல் சுடுவது, அனைவரையும் ஒரே ஆளாக சமாளிப்பது, இறந்தவர்களின் கையை பிடித்து அழுவது கொண்ட காட்சிகள் போக்கிரி படத்தில் இடம் பெற்றது போலவே லியோ படத்திலும் உள்ளது.
கடந்த 2007- ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிப்பில் போக்கிரி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், நெப்போலியன், நாசர், வடிவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கதாகும்.