தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் மூத்த மகள் தான் ஸ்ருதிஹாசன். இவர் தென்னிந்தியாவில் பணியாற்றும் நடிகை மற்றும் பாடகி ஆவார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களிலும் பணியாற்றி இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
முதலில் இந்தி திரையுலகில் அறிமுகமான ஸ்ருதிஹாசன் பின்னர் 2011 ஆம் ஆண்டு ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே நல்ல விமர்சனங்களை பெற்று பிரபலமானார் ஸ்ருதிஹாசன். அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான விருதையும் வென்றார்.
அடுத்ததாக தனுசுடன் இணைந்து 2012 ஆம் ஆண்டு 3 திரைப்படத்தில் நடித்து திருப்புமுனையை பெற்றார். இந்த படம் வெற்றி பெற்றது. தொடர்ந்து பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன். இது மட்டுமில்லாமல் பின்னணி பாடகராக பல பாடல்களையும் பாடி இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
இந்நிலையில் Air Indigo விமான சேவை ஸ்ருதிஹாசனை டென்ஷன் ஆக்கி இருக்கிறது. அதற்காக காட்டமாக தனது twitter பக்கத்தில் பதிவு ஒன்றையும் போட்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன். என்ன நடந்தது என்பதை விரிவாக இனி காண்போம். தற்போது ஸ்ருதிஹாசன் மும்பையில் வசிப்பதாக கூறப்பட்ட நிலையில் ஸ்ருதிஹாசன் Air Indigo வில் டிக்கெட்டை புக் செய்து விமான நிலையத்தில் நான்கு மணி நேரமாக காத்திருந்திருக்கிறார்.
ஆனால் அவர் போக வேண்டிய குறிப்பிட்ட விமானம் வராததால் கோபம் அடைந்த ஸ் ஸ்ருதிஹாசன் ட்விட்டரில் விமானம் தாமதமாகும் என்று தெரிந்தால் நீங்கள் ஏன் முறையாக பயணிகளுக்கு அறிவித்திருக்கலாமே ஏன் அதை நீங்கள் செய்யவில்லை நான் எப்போதும் கம்ப்ளைன்ட் கூறும் ஒரு நபர் அல்ல ஆனால் உங்களது இந்த செயல் எங்களை கஷ்டப்படுத்தியது என்று காட்டமாக பதிவிட்டு இருக்க இதற்கு பதில் அளித்தா இண்டிகோ நிறுவனம் உங்களது அசௌரியத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். மும்பையில் மோசமான வானிலை காரணமாகவே விமானம் தாமதமானது என்று கூறி பதிலளித்து இருக்கின்றனர்.