80ஸ், 90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ரேவதி. கடந்த 1981ம் ஆண்டு ரிலீசான மண்வாசனை திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த திரைப்படத்தை பாரதிராஜா இயக்கினார்.

பாண்டியன் ஹீரோவாக நடித்தார். இதனை தொடர்ந்து புதுமைப் பெண், வைதேகி காத்திருந்தாள், உதயகீதம், ஆன் பாவம், ஒரு கைதியின் டைரி, கன்னி ராசி, பகல் நிலவு, மௌன ராகம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் ரேவதி நடித்துள்ளார்.

நடிகை ரேவதி தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு மீடிர் மை பிரண்ட் என்ற ஆங்கில படத்தை ரேவதி இயக்கினார்.

இந்த திரைப்படத்தை இயக்கியதற்காக ரேவதிக்கு சிறந்த படத்திற்கான விருது வழங்கப்பட்டது. 2022-ஆம் ஆண்டு சலாம் வெங்கி என்ற ஹிந்தி படத்தை இயக்கினார். இப்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒரு வெப் சீரிஸை ரேவதி இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ரேவதியின் லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. தலைமுடி நரைத்து அடையாளமே தெரியாத அளவுக்கு ரேவதி மாறிவிட்டார். அதனை பார்த்த ரசிகர்கள் 90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த ரேவதி இது என ஆச்சரியத்தில் கமண்ட் செய்து வருகின்றனர்.

