41 வயதாகியும் திரிஷா திருமணம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் இது தான்.. உண்மையை உடைத்த பிரபலம்..!

By Nanthini on ஐப்பசி 12, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை ஆக டைட்டிலை வென்றவர். அதனைத் தொடர்ந்து சினிமாவில் களமிறங்கிய அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மட்டுமல்லாமல் இந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தன்னுடைய ரீ என்ட்ரியில் விஜய், அஜித் மற்றும் கமலஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வருகின்றார். தொடர்ந்து விஜயுடன் லியோ மற்றும் கோட் திரைப்படங்கள் திரிஷா நடிப்பில் வெளியாகி அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளன. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக கமல்ஹாசன் உடன் தக் லைப் மற்றும் அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி திரைப்படங்களிலும் திரிஷா நடித்துக் கொண்டிருக்கிறார்.

   

இந்த இரண்டு திரைப்படங்களுமே அடுத்தடுத்த ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. நடிகை திரிஷா தொடர்ந்து 20 ஆண்டுகளை கடந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வருகின்றார். ரஜினி, கமல், விஜய், அஜித் மற்றும் சூர்யா என கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் இணைந்த இவர் நடித்துள்ளார். அதனைப் போலவே மற்ற மொழிகளிலும் திரிஷா முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். பாலிவுட் படங்களிலும் நடித்துள்ள நிலையில் தான் இந்தியா நடிகையாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். சில காலங்கள் சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த திரிஷாவுக்கு தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளன. குறிப்பாக மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.

   

 

இந்நிலையில் 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் திரிஷா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் எனக்கே தெரியவில்லை. அதற்கான ஆளை நான் இன்னும் பார்க்கவில்லை என்று கூறி இருந்தார். இந்த நிலையில் திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கான காரணம் பற்றி நடிகை ஷர்மிளா youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதில், திரிஷாவுக்கு இப்போ நல்ல மார்க்கெட் இருக்கு. சினிமாவில் மார்க்கெட் குறையாமல் பயணித்து கொண்டிருக்கிறார். அதனாலதான் அவங்க இன்னும் திருமணம் செஞ்சுக்காம இருக்காங்க. திருமணம் என்ற உறவில் சென்று விட்டால் ஒருவர் கட்டுப்பாட்டுக்குள் நாம் இருக்க வேண்டும். சிங்கிளாகவே இருந்து விட்டால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நிம்மதியாக தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழலாம் என்பதால் திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.